இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தற்போது உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கடந்த டிச. 2-ஆம் தேதி பெங்களூரில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தில்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்151 பேர் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று தற்போது தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம்,தமிழகம், ஆந்திரா, சண்டீகா், மேற்கு வங்கம் உள்பட 19 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.