states

img

இந்தியாவில் ஒரே நாளில் 2,34,692 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2வது அலை உச்சத்தை தொட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில்  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,341 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது. 
நேற்று ஒரே நாளில் 1,23,354 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 16,79,740 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
நாடு முழுவதும் நேற்று வரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

;