states

ஜி 20 மாநாடு கலந்துரையாடல் புதுவையில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி, ஜன. 28- ஜி 20 மாநாட்டு கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவதையொட்டி அறிவிக்கப்பட்ட இடங்களில் 144 தடை நாளை முதல் அமலில் இருக்கும் என ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாடு பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் தலை மையில் சனிக்கிழமை (ஜன. 28) நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் மாதம் முதல்  இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச் சேரியில் வரும் 30, 31 தேதிகளில் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 நட்பு நாடுகளுக்கு ஒன்றிய அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை  சிறப்பாக நடத்துவதற்கு புதுச்சேரி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில், ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி  என்ற தலைப்பில் ஜி 20 உறுப்பு நாடுகள் மற்றும் இந்திய நாட்டின் சுற்றுச் சூழல் மற்றும் அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் விஞ்ஞானி கள் கலந்து கொண்டு கலந்துரையாட உள்ளனர்.
144 தடை உத்தரவு  
இந்த கலந்துரையாடல் கூட்டத்தை யொட்டி பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகள் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி விமான நிலையம், அக்கார்ட் ஓட்டல், ரெசிடென்சி டவர் ஓட்டல்,  ரேடிசன் ஓட்டல், சுகன்யா கன்வென்சன்  சென்டர் உள்ளிட்ட 5 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். மேலும், பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் உணவு விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் 29ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். அப்பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஜி 20 மாநாட்டு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெறும். இந்த மாநாட்டு கலந் துரையாடல் கூட்டத்தால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. பள்ளி கள் மற்றும் அனைத்து நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும். ஜி 20  மாநாட்டை பார்க்க பார்வையாளர்க ளுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

;