states

img

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜன.30 பீகாரில் மாபெரும் மனிதச் சங்கிலி.... பீகார் மகாகத்பந்தன் கூட்டணி அறைகூவல்....

பாட்னா:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் முற்றுகையிட்டு பல்வேறுமாநில விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டத்தை  ஜனவரி 30 அன்று நடத்திட பீகார் மகாகத்பந்தன் கூட்டணி அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சியின் தலைவர் (ஆர்ஜேடி) தேஜஸ்வியாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுத்து நெல் கொள்முதல் செய்வது குறித்தோ, தில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் இறக்கும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளபோதிலும் அது குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. எனவே எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திட முன்வந்திருக்கிறோம். வரும் தியாகிகள் தினமானஜனவரி 30 அன்று மகாகத்பந்தன் சார்பில்பஞ்சாயத்து மட்டத்தில் மனிதச் சங்கிலிப்போராட்டம் நடத்திடத் தீர்மானித்திருக்கிறோம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அருண் குமார் மிஷ்ரா செய்தியாளர்களிடையே பேசுகையில், “வேளாண் சட்டங்கள்குறித்து அனைத்து விவசாயிகள் மத்தியிலும்விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள கவனம் செலுத்தப்படும். மத்திய அரசாங்கம்விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது. இதே அரசாங்கம்தான் விவசாயிகளுக்கு 2022இல் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு அளித்துவந்த குறைந்தபட்ச ஆதாரவிலையைக்கூட தராமல் ஒழித்துக்கட்டிவிட்டது,” என்று தெரிவித்தார்.(ந.நி.)
 

;