காத்மண்டு, நவ.20- நேபாளத்தில் புதிய நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு ஞாயிறு காலை ஏழு மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து மணிக்கு நிறைவடைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடும் 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள். முக்கிய அரசியல் கட்சி களில் சிபிஎன்-யுஎம்எல் 141 வேட்பாளர் களையும், நேபாளி காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-மாவோயிஸ்ட் முறையே 91 மற்றும் 46 வேட்பாளர்களையும் நிறுத்தி யுள்ளன. நாடு முழுவதும் உள்ள 77 மாவட்டங் களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகள் விமான ரோந்து வாகனம் மூலம் கண் காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவை யொட்டி சர்வதேச எல்லைகள் 72 மணி நேரம் மூடப்பட்டிருந்தது.
வாக்குப்பதிவிற்காக 22,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தாபூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் தினேஷ் குமார் தபாலியா, அனைத்து வாக்குப் பெட்டிகளும் வந்து சேர்ந்த பபின் ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு வாக்கு எண்ணி க்கை தொடங்கும் எனத் தெரிவித்தார். விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். அடுத்த எட்டு நாட்களில் அனைத்து முதல்-நிலை முடிவு களையும் ஆணையம் அறிவிக்கும் என்றும் தபாலியா கூறினார். நேபாளத்தில் வாக்களிக்கத்தகுதி யானவர்கள் 179 லட்சம் பேர். இவர்கள் 275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையைத் தேர்ந்தெடுப்பர். மொத்தமுள்ள 275 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கெடுப்பின் மூலமும், மீதமுள்ள 110 பேர் விகிதாசார தேர்தல் முறையின் மூலமும் தேர்வு செய்யப்படுவார்கள். மாகாண சபைகளின் மொத்தமுள்ள 550 உறுப்பினர்களில் 330 பேர் நேரடி யாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். புதியதாக பொறுப்பேற்கும் அரசு ஒரு நிலையான அரசியல் தன்மையை நிலை நாட்டுவது, சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிப்பது, சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பாதுகாப்பது போன்ற சாவலகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.