கபில் சிபல் பதிலடி
புதுதில்லி, ஏப். 8 - பாஜக ஆட்சியில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் என்று ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞரு மான கபில் சிபல் கூறியுள்ளார். “சமூக நீதி என்பது பாஜகவின் நம்பிக்கை... அதைக் கொள்கையா கவும் நடைமுறையிலும் பாஜக கடைப் ்பிடிக்கிறது. நாட்டில் 80 கோடி மக்கள் இலவச ரேசன் பெறுவது சமூக நீதியின் வெளிப்பாடு. எந்தவித பார பட்சமுமின்றி 50 கோடி ஏழைகள் பயன்பெறும், ரூ. 5 லட்சம் வரையி லான இலவச மருத்துவச் செலவுத் திட்டம் சமூக நீதிக்கான எடுத்துக் காட்டு. நமது காரியகர்த்தாக்களின் பக்தி, அர்ப்பணிப்பு, சக்தி, தேசநலனே பிரதானம் என்ற மந்திரம் போன்றவை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும் என நான் நம்புகிறேன்” என்று பாஜக-வின் நிறுவன விழாவில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்குத்தான் கபில் சிபல் தற்போது பதிலளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “பாஜக சமூக நீதிக்காக இயங்குகிறது. சமூக நீதியை கொள்கையிலும் எண்ணத்திலும் கடைப்பிடிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துப் பதிவிட்டுள்ள கபில் சிபல், “1. கடந்த 2012 - 2021 வரை உருவாக்கப் பட்ட செல்வ வளங்களில் 40 சத விகிதம், மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சென்றிருக்கிறது. 2. கடந்த 2022-ஆம் ஆண்டில் அதானியின் சொத்துக்கள் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது, 3. நாட்டின் 64 சதவிகித ஜிஎஸ்டி வரு வாய் 50 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள வர்களிடமிருந்தே பெறப்படுகிறது; 4 சதவிகிதம் மட்டுமே ‘டாப் 10’ சதவிகி தம் உள்ளவர்களிடமிருந்து பெறப்படு கிறது. பணக்காரர்கள் மேலும் பணக் ்காரர்களாகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்” என்று குறிப்பிட் டுள்ளார்.