“ஓபிஎஸ் தரப்பினருக்கு வேறு வழியில்லை. அதிமுகவின் வலிமை மிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சுமார் 4 ஆண்டுகள் நடத்தினார். ஓபிஎஸ் துணையோடு தான் ஆட்சி நடைபெற்றது. அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் அண்ணனாக இருந்தவர்தான். அண்ணன் தம்பிக்கு இடையே சில பிரிவு கள் வரலாம்.. பிரச்சனைகள் வரலாம்.”
புதுதில்லி/சென்னை, பிப்.6- எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த கே.எஸ். தென்னரசுவுக்கு ஆதரவளிக்கும் பொதுக் குழு உறுப்பினர்கள் கடிதம், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ஒதுங்கிக் கொண்டுள்ளார். பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறியது போல, தனது அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட் பாளர் செந்தில் முருகனையும் ஓ. பன்னீர்செல் வம் திடீரென திரும்பப் பெற்றுக் கொண் டுள்ளார். மேலும், அதிமுக சார்பில் ஒரே அணியாக போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை யின் ‘விருப்பமும்’ நிறைவேறியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த கே.எஸ். தென்னரசு மட்டுமே அதிமுக-வின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக போட்டியிடுவார்; இன்று அவர் முறைப்படி தனது வேட்புமனுவைத் தாக் கல் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இவர்களது வழக்கில், “அதிமுக பொதுக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும்; பொதுக் குழுவின் முடிவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்; அவைத்தலைவரின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும்; பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல் வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகி யோரையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண் டும்” என உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்பப் படிவம் விநியோ கம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த சனிக் கிழமை தொடங்கி விட்டதாகவும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்பப் படிவம் அனுப்பப்பட்டு உள்ளது; அந்த கடிதத்தை முறைப்படி பூர்த்தி செய்து 5-ஆம் தேதி இரவு 7 மணிக்குள் ஒப்ப டைக்குமாறு, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
தில்லியில் அவைத் தலைவர்
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பா ளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிடும் அந்த கடிதம், நோட்டரி பப்ளிக் சான்றுடன் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அடங்கி யதாக தயாரிக்கப்பட்டிருந்தது. ஓ. பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், வேட்பாளரைத் தேர்வு செய்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதங்களை, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், சி.வி. சண்முகம் எம்.பி., இன்பதுரை ஆகியோர் திங்களன்று பிற்பகல் 3 மணியளவில் தில்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஒப்படைத்த னர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த சி.வி. சண்முகம் “அதிமுக-வில் மொத்த மாக 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்த னர். அதில், உயிரிழந்தவர்கள், மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள் போக, மீதமுள்ள 2,646 பேர் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அனைத்து வழிகளிலும் வேட்பாளர் தேர்வுப் படிவம் அனுப்பப்பட்டது. அதில் பொதுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பேர் வாக்கு அளித்துள்ளனர். மறுப்பு என்று எந்த வாக்கும் வரவில்லை. ஆனால் 145 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. அந்தப் படிவங் களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தி ருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
வேட்பாளரை வாபஸ் பெற்ற பன்னீர்செல்வம்
ஆனால், கே.எஸ். தென்னரசுவை வேட்பாள ராக பரிந்துரைக்கும் பொதுக்குழு உறுப்பி னர்களின் கடிதங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்களின் தரப் பில் வேட்பாளராக நிறுத்தியிருந்த செந்தில் முருகனை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு திடீரென திரும்பப் பெற்றது. ஓ. பன்னீர்செல்வம் அணி யைச் சேர்ந்த கு.ப. கிருஷ்ணன், திங்களன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளி யிட்டார். “அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங் கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அதி முக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணியாக இருந்தால்தான் திமுக-வை எதிர்க்க முடியும். இதுபற்றி ஓ. பன்னீர் செல் வத்திடம் பேசினேன். ஓ. பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட, எடப்பாடி தரப்பின் வேட்பா ளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண் டேன். ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்பளாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்” என்று பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது பேட்டியில் கூறி யிருந்தார். அதன்படியே தற்போது ஓ. பன்னீர் செல்வம் தனது வேட்பாளரைத் திரும்பப் பெறு வதாக அறிவித்துள்ளார்.
ஆனால், “அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தியது பாஜக. அதிமுக ஒன்றாக இருந்த தற்கு பாஜக ஒரு காரணம் என்றாலும், அவர் கள்தான் இப்போது ஓ. பன்னீர்செல்வம் ‘வேட்பா ளர் வாபஸ் முடிவு’ எடுக்கக் காரணம் என்று சொல்ல முடியாது. அண்ணாமலை கூறித்தான் நாங்கள் வாபஸ் வாங்கினோம் என்று சொல் வதை ஏற்க முடியாது. இரட்டை இலை சின்னம் முடங்கக் கூடாது என்றுதான் ஓ. பன்னீர்செல் வம் இந்த முடிவை எடுத்தார். மற்றபடி இதில் எந்த அழுத்தமும், யாருடைய அழுத்தமும் இல்லை” என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி சமாளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் பெயர் வேட்பாளர் தேர்வு படிவத்தில் இல்லையென்றும், தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியின் முகவராக செயல்படுவதாகவும் வைத்தியலிங்கம் விமர் சித்திருந்தார். இதனிடையே தமிழ் மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந் துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி குறித்து எதுவும் இல்லாததால், அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படி அதிமுக அவைத்தலைவர் செயல்பட வில்லை என்றும், இதுபோன்ற சட்டமீறல் செய லுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம் என்றும் ஓ. பன்னீர் செல்வம் கூறி யிருந்தார். இதனால், பொதுக்குழு விவகாரம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று பார்க் கப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் இல்லா மல் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய ‘தர்மயுத்தம்’ போல இதுவும் உப்புப் சப்பில்லாத, வழக்கம் போல பாஜக முன்னின்று இயக்கிய நாடகக் காட்சியாகவே நடந்து முடிந்துள்ளது.
வேட்பாளர் வாபஸ் முடிவை அறிவித்த கு.ப. கிருஷ்ணன், “எங்களின் நோக்கம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடக்கூடாது. இரட்டை இலை சின்னம், தேர்தலில் தோல்வி யை தழுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிபெற்ற காரணத்தால், இரட்டை இலைக்கு ஆதரவாக எங்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் விலகு கிறார். இரட்டை இலையை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக செந்தில் முருகன் விலகு கிறார். தென்னரசுக்காக நாங்கள் விலக வில்லை. இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் கேட்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச் சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, “தென்ன ரசுக்காக வாக்கு கேட்க மாட்டோம். இரட்டை இலை சின்னத்திற்காக வாக்கு கேட்போம்; எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்திற்கு வாக்க ளியுங்கள் மக்களே என்று வாக்கு கேட்போம்” என்றும் கு.ப. கிருஷ்ணன் கூறியுள்ளார்.
‘நம்முடைய’ ஓ.பி.எஸ்-சுக்கு நன்றி: செங்கோட்டையன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில், அவருக்கு எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். “எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பா ளர் தென்னரசுக்கு ஆதரவளிப்பதாக ‘நம்மு டைய’ ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அவரது வேட்பாளரை வாபஸ் பெற்று கொண்டிருக்கி றார். அதன் மூலம் எங்களுக்கும் ஒளி பிறந்தி ருக்கிறது. ஆகவே, அனைவருக்கும் நன்றி” என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்-சுக்கு வேறு வழியில்லை: வைகைச் செல்வன்
“ஓபிஎஸ் தரப்பினருக்கு வேறு வழி யில்லை. அதிமுகவின் வலிமை மிக்க தலைமை யாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெய லலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சுமார் 4 ஆண்டுகள் நடத்தினார். ஓபிஎஸ் துணையோடு தான் ஆட்சி நடைபெற்றது. அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் அண்ணனாக இருந்த வர்தான். அதில் மாற்று கருத்து எதுவும் கிடை யாது . அண்ணன் தம்பிக்கு இடையே சில பிரிவு கள் வரலாம்.. பிரச்சனைகள் வரலாம். இருந்தா லும் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று ஒரே அஜெண்டா எங்களுக்கு இருக்கிறது. இந்த அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கு ஒரு தலைமை வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி யில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறுவதற்கு யாரெல்லாம் துணை வேண்டுமோ அவர்களை எல்லாம் அரவணைத்து செல்கி றோம். தென்னரசு அவர்களை அதிமுக வேட்பா ளராக எடப்பாடி நிற்க வைத்து இருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனை வரும் ஒருமுகத்துடன் பணியாற்றி கொண்டு இருக்கிறோம். ஓபிஎஸ் ஆதரவை பெறுவது குறித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலா ளர் மற்றும் மூத்த தலைவர்கள் முடிவு செய் வார்கள்” முன்னாள் அமைச்சர் வைகைச் செல் வன் கூறியுள்ளார்.