states

img

நீண்டகாலம் கிடப்பில் உள்ள வழக்குகளுக்கு 75-ஆவது சுதந்திர தினத்திற்குள்ளாவது தீர்வு காணுங்கள்

குண்டூர் (ஆந்திரா), ஜன.1- பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை 75-ஆவது சுதந்திர தினத்திற்குள் தீர்த்து வைக்க வேண்டும் என அனைத்தும் நீதிமன்ற நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறி வுறுத்தியுள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட், ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில  உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை  அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்  கூறியதாவது:- வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. ஏதாவது ஒரு விவரம்  அல்லது ஆவணங்களுக்காக  கிட்டத்தட்ட 14 லட்சம் வழக்குகள் நிலு வையில் உள்ளன. வழக்குகளை விரை வாக முடிக்க வழக்கறிஞர்கள் ஒத்து ழைக்க வேண்டும்.  நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை கணக்கிலெடுத்தால் சில வழக்குகள் 1970-ஆம் ஆண்டில் தொடரப்பட்டவை. 2023-ஆம் ஆண்டு  சுதந்திர தினத்திற்குள், ‘நீதித்துறை கடி காரம்’ குறைந்தது பத்தாண்டுகள் முன் னேறியுள்ளது என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.  

குண்டூர் நீதிமன்றத்தில் 1980-ஆம்  ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி தொடரப் பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 1980-ஆம் ஆண்டு முதல் 1990- ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் குண்டூரில் நான்கு சிவில் வழக்கு களும் ஒரு கிரிமினல் வழக்கும் நிலுவை யில் உள்ளன. இந்த ஐந்து வழக்குகளை யும் தீர்த்து வைப்பதன் மூலம் குண்டூர் மாவட்ட நீதிமன்றம் பத்தாண்டுகள் முன்னோக்கி பயணிக்க முடியும்.   இதேபோல், அனந்தபூரில் 1978-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை ஒன்பது கிரிமினல் மற்றும் ஒரு  சிவில் வழக்கு உட்பட பத்து வழக்கு கள் நிலுவையில் உள்ளன.  இந்த  வழக்குகளை தீர்ப்பதன் மூலம் அனந்தபூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் முன்னேறிச் செல்ல முடியும். ஆந்திர உயர்நீதிமன்றத்தில், 1976-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு உள்ளது.  உயர்நீதிமன்றம் பத்து ஆண்டு கள் முன்னோக்கி பயணிக்க 138 வழக்குகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.