states

img

நாட்டில் வறுமை அரக்கனாக மாறிவிட்டது

ஆர்.எஸ்.எஸ் ஒப்புக்கொண்டது புதுதில்லி, அக்.5- நாட்டில் வறுமை, வேலையில்லா திண் டாட்டம், சமத்துவமின்மை அதிகரித்து வரு வதை ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக ஒப்புக்  கொண்டுள்ளது. இந்தியாவில் வறுமை தலை விரித்தாடுகிறது என்றும் அந்த அரக்கனை கொல்வது முக்கிய சவால் என்றும் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோச பலே கூறினார். சங்பரிவார் அமைப்பான சுதேசி ஜாகரன்  மஞ்சின் வெபினாரில் அவர் மேலும் கூறிய தாவது: இந்தியாவில் 20 கோடிக்கும் அதிக மான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள னர். 23 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு  நாளைக்கு ரூ.375க்கும் குறைவாகவே சம்பா திக்கிறார்கள். நான்கு கோடிக்கும் அதிகமா னோர் வேலையில்லாமல் உள்ளனர். தொழி லாளர் படை (லேபர் போர்ஸ்) குறித்த கணக்  கெடுப்பின்படி, வேலையின்மை விகிதம் 7.6 ஆக உள்ளது எனவும் தத்தாத்ரேயா ஹோச பலே கூறினார். நாட்டின் மொத்த செல்வத்தில் ஐந்தில்  ஒரு பங்கை (20 சதவிகிதம்) மக்கள் தொகை யில் ஒரு சதவிகிதம் பேர் வைத்திருப்பது நல்ல  சூழ்நிலையா? பெரும்பாலான பகுதிகளில், மக்களுக்கு நல்ல தண்ணீர் அல்லது ஊட்  டச்சத்து கிடைப்பதில்லை என்றும் ஹோச பலே கூறினார். தற்போதைய பொருளா தாரக் கொள்கைகள் வறுமை மற்றும் வேலை யின்மைக்கு காரணம் என ஆர்எஸ்எஸ் இதற்கு முன்பும் விமர்சித்துள்ளது.

;