states

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

புதுதில்லி,டிச.28- இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோ வேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.  ‘கோவிஷீல்டு’ , ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.  பின்னர் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் தடுப்பூசியும், தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஸ்புட்னிக் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் போடப்படுகிறது.   இந்நிலையில் இந்தியாவில் கோர்பி வேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.  

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோ னா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற் றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகா ரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமை ப்பு (சிடிஎஸ்சிஓ),கொரோனா தடுப்பூசி களான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னு பிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

கோர்பிவேக்ஸ் தடுப்பூசி என்பது  ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலா ஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டில் உரு வாக்கப்பட்ட ஆர்பிடி புரத துணை அலகு தடுப்பூசி ஆகும். தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3ஆவது தடுப்பூசி இதுவாகும். அதே சமயம், நானோ துகள்கள் தடுப்பூசி கோவோவாக்ஸ் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப் பட்டது. மேலும், மோல்னுபிராவிர் ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது தற்போது நாட்டில் 13 நிறுவனங்களால் தயாரிக்கப் படும் மருந்து. இது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வயது வந்த நோயாளி களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.