states

img

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா அரசும் போர்க்கொடி

இளநிலை மருத்துவப் படிப் ்பிற்கான நடப்பாண்டு நீட்  தேர்வு கடந்த மே மாதம் 5 அன்று நடைபெற்றது. கடந்த காலங்க ளை போலவே நடப்பாண்டிலும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல்வேறு சர்ச்சை சம்பவங்களுடன் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவு ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலி டம் பிடித்தனா். ஆனால் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து இருந்த தால் சக மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் சந்தேகம் வலுத்தது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்த மாணவர்க ளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுக்காததும் கடும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இதையடுத்து நீட் தேர்வு  முறைகேடு சர்ச்சை குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், “இந்தியா” கூட்டணி ஆளும் தமிழ்நாடு அரசு மற்றும் கல்வியாளர்கள் நீட் தேர்வை  ரத்து செய்ய குரல் கொடுத்து வரும் நிலையில், இதன் வரிசையில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா  அரசும் இணைந்து நீட் தேர்விற்கு  எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் (தேசியவாத காங்கிரஸ் (அஜித்) எம்.பி.) கூறுகையில்,”நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்படுகிறது. நடந்து முடிந்த நீட் தேர்வில் மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் மிக மோசமான அளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேசிய மருத்துவக் கவுன்சிலிலும், நீதி மன்றத்திலும் முறையிடுவோம்” என அவர் கூறினார். வழக்கமாக நீட் தேர்விற்கு எதிராக பாஜக ஆளாத மாநிலங்களே போர்க்கொடி தூக்கியி ருந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணி ஆளும் மாநிலமே இதன்  வரிசையில் இணைந்து இருப்பது மூன்றாவது முறையாக அமைய வுள்ள மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணை தொடங்கியது

நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக தேசிய மருத்துவக் கவுன்சில் பரிந்துரையின் பேரில் சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநி லத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு  மதிப்பெண் பெற்றது பற்றி விரிவான விசாரணை நடத்த சிபிஐ நடவ டிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் ராஜஸ்தான், பீகார் ஜார்க்கண்ட், தில்லி மாநிலங்களில் அரங்கேறிய நீட் மோசடி சம்பவங்கள் தொடர்பான விசாரணை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.