தீக்கதிர் விழாவில் பிரகாஷ் காரத் முழக்கம்
திருநெல்வேலி, செப்.23- மதவெறி பாஜகவை தனிமைப்படுத்தி, மக் கள் விரோத மோடி அரசை 2024 தேர்தலில் வீழ்த்துவதே நமது முதன்மை கடமை என்றும், இதற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு உருவாக்கியுள்ள மாபெரும் அரசியல் மேடையான ‘இந்தியா’ அணி, மேலும் மேலும் உறுதியோடு வலுவடை யும் என்றும் பிரகாஷ் காரத் முழக்கமிட்டார். ஊடக உலகில் உண்மையின் பேரொளி யாம் தீக்கதிர் நாளிதழின் ஐந்தாவது பதிப்பாக திருநெல்வேலி பதிப்பு செப்டம்பர் 22 வெள்ளி யன்று உதயமானது. இப்பதிப்பின் முதல் இதழை, பாளையங்கோட்டையில் தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தலை மையில் நடைபெற்ற மாபெரும் விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வெளியிட்டு, அரசியல் உரையாற்றினார். அவ ரது உரை வருமாறு:
1973 ஆம் ஆண்டு நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் தீக்கதிர் தினசரி நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. தற்போது வைரவிழாவின் நிறைவில் திரு நெல்வேலியிலிருந்து ஐந்தாவது பதிப்பை துவக்கி வைக்கும் வாய்ப்பை எனக்கு அளித் துள்ளீர்கள். தென் மாவட்டங்களுக்கு சிறப்பான சேவையை தீக்கதிர் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்த 60 ஆண்டுகளில் ஒரு கம்யூ னிஸ்ட் நாளிதழ் என்கிற அதன் விழுமியங்களை கடைப்பிடித்து வந்திருக்கிறது தீக்கதிர். ‘கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை, மக்களின் போராட்டங்களை உருவாக்கும், உழைப்பாளி களுக்கு போராட்டத்தை கற்றுக்கொடுக்கும், மக்களை அணி திரட்டும் ஓர் அமைப்பாளராக செயல்படும்’ என்று மாமேதை லெனின் கூறு வார். அந்த பணிகளை தீக்கதிர் செவ்வனே செய்து வருகிறது. தமிழ்நாட்டு உழைப்பாளி மக் கள் அனைவரின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம், மதச்சார் பின்மை, சோசலிசத்திற்கான குரலாக தீக்கதிர் தனது மகத்தான பணியை ஆற்றியிருக்கிறது.
மோடிக்கு ஆதரவாக கார்ப்பரேட் ஊடகங்கள்
கடந்த 9 ஆண்டு காலமாக மோடியின் ஆட்சி யில், ஜனநாயக விழுமியங்கள் மீது கடும் தாக்கு தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதே போல ஊடக சுதந்திரத்தின் மீதும், மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகவியலா ளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதும் கடு மையான தாக்குதல் தொடுக்கப்பட்டு வரு கிறது. ஒருபுறம் ஒட்டுமொத்த ஊடகங்களை யும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அல்லது ஒடுக்குவது என்கிற முறையில் மோடி அரசு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. மற்றொருபுறம் கார்ப்பரேட்டு களின் கரங்களில் தேசிய ஊடக உலகம் சிக்கி யிருக்கிறது. அவை மோடி அரசின் இந்துத்துவா செயல்பாடுகளை முன்னிறுத்தி அவர்களுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்யும் கருவிகளாக உள்ளன. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக குரல் எழுப்புவதில்லை என்கிற முறையில் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தீக்கதிர் போன்ற பத்திரி கைகளின் முக்கியத்துவமும் மதிப்பும் அதி கரிக்கின்றது. தீக்கதிர் போன்ற பத்திரிகை கள்தான் ஜனநாயக விழுமியங்களை- மக்க ளின் மாண்புகளை பாதுகாக்கின்றன.
கார்ப்பரேட் ஊடகங்கள் மோடிக்கு ஆதர வாக மிகப்பெரிய பொய்ப் பிரச்சாரத்தில் ஈடு பட்டிருக்கின்றன. அண்மையில் தில்லியில் ஜி 20 மாநாடு நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி இந்தியா உலகத்திலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது என்கிற மிகப்பெரிய பொய்யை கட்டவிழ்த்து விட்டார். விரைவில் மூன்றாவது பெரியபொருளாதார மாக மாறி விடும் என்றும் கூறிக்கொண்டார். இந்தக் கருத்தை கார்ப்பரேட் ஊடகங்கள் மிகப் பெரிய அளவுக்கு பிரச்சாரம் செய்தன. ஆனால், ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் பட்டி யலைப் பார்த்தால் இந்தியாதான் பொருளா தார வளர்ச்சியில் கடைசி நாடாக இருப்பதை காணமுடியும். இந்த உண்மையை திரித்து அந்த ஊடகங்கள் வெளியிட்டன. நாட்டு மக்களின் உண்மை நிலை என்ன என்பது நமக்கு தெரியும். மிகப்பெரிய அளவுக்கு வேலையின்மையும், விவசாயிகளின் துயரமும் வளர்ந்துகொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு உச்சத்திற்கு சென்றிருக்கிறது. அதைத் தாங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கி றார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவி்ல்லை. இந்த 9 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் சூறையாடுவதற்குத்தான் ஒன்றிய அரசு உதவி செய்துள்ளது. மோடி கூறும் வளர்ச்சி அதானி ,அம்பானி போன்றவர்களின் வளர்ச்சியாகவே உள்ளது. எளிய மக்களின் வளர்ச்சிக்கு அது உதவவில்லை. தொழிலா ளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கைவினை கலைஞர்கள், வணி கர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமை யாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜி 20 மாநாட் டில் மோடி கூறியதில் உண்மை இல்லை என் பதை இவை நிரூபிப்பதாக உள்ளன. அதை தீக்கதிர் போன்ற முற்போக்கு ஏடுகள் தான் பதிவு செய்கின்றன.
அரசியலமைப்பின் அடிப்படையைத் தகர்க்க முயற்சி
ஆர்எஸ் எஸ், பாஜக தலைமையிலான மோடி அரசு, நமது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை யையே தகர்த்து, மிகப்பெரிய மோசமான மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களையும் ஆலோ சனைகளையும் மோடி அரசு கொண்டுவரு கிறது. சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது . அதுபோல நமது கூட்டாட்சி அமைப்பை – நாடா ளுமன்ற ஜனநாயக கட்டமைப்பை – மதச்சார் பற்ற அமைப்பு முறையை தகர்க்கவும், மாற்ற வும் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்கிற திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அப்படி செய்வதன்மூலம் நாடாளுமன்றம், அனைத்து சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்பு களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண் டும் என்பது அவர்களது திட்டம். இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற் படுத்த முயற்சிக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். 5 ஆண்டு களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல மாநில அரசுகள் அதற்கு முன்பே தகுதி இழந்து தேர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்படும். சில மாநிலங்களில் பதவிக் காலம் முடிந்து ஓரிரு ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை நீட்டிக்கும் நிலை உருவாகும். இதற்கான அதிகாரத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கப் போவதாக மோடி அரசாங்கம் கூறுகிறது.
2024 இல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங் கத்தில் 2026 இல்தான் அடுத்த சட்டமன்ற தேர் தல்கள் நடைபெறும். இப்போது ஒரே தேர்தல் ஒரே நாடு என்பதை அமல்படுத்தினால் தமிழ்நாடு உட்பட இந்த மாநிலங்களின் ஆட்சியின் 2 ஆண்டுகள் வெட்டிச் சுருக்கப்படும். இது இந்த மாநிலங்களில் வாக்களித்த மக்களின் உரிமை யையும் அந்த சட்டமன்றங்களின் உரிமையையும் பறிப்பதாகிவிடும். ஆனால் இதை செயல்படுத்துவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்துள்ளார்கள். இதன் நோக்கம் இந்திய நாடாளுமன்ற அமைப்பின் அடிப்படைத் தன்மையை மாற்றி நாடா ளுமன்ற ஜனநாயகத்தையும் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் மத்திய அர சின் கைகளுக்கு கொண்டு வந்து ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதை நிறுவி நாட்டை மேலாதிக்கம் செய்வதாகும்.
மகளிர் மசோதா - ஒரு மோசடி
மோடி அரசுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவும் செல்வாக்கும் தொட ர்ந்து சரிந்து வருகிறது. இந்த உண்மை யை அவர்கள் உணர்ந்து கொண்டி ருக்கிறார்கள். 2023 இல் பாஜக ஆட்சி யில் இருந்த கர்நாடகம் மற்றும் இமாச் சல பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தன. அவற்றில் பாஜக படுதோல்வி கண்டது. இப்போது 4 மாநி லங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் மிகப்பெரிய தோல்வி யைத்தான் அவர்கள் தழுவுவார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்தி ருக்கிறது. அதனால்தான் புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து அவற்றை அமல்படுத்துவதுபோல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி மக்களிடம் ஆத ரவு பெற முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான், நாடா ளுமன்றம் சட்டமன்றங்களில் மக ளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குதற்கான மசோதாவை திடீ ரென கொண்டுவந்து நிறைவேறியி ருக்கிறது மோடி அரசு. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன. ஆனால், தான்தான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவை நிறை வேற்றியதாக மார்தட்டிக்கொள்கிறார் மோடி. இட ஒதுக்கீடு சட்டம் நிறை வேறிவிட்டது. ஆனால் இப்போது அம லாகாது. இங்கே அமைச்சர் மனோ தங்க ராஜ் அவர்கள் பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு 2029 இல்தான் அமலா கும் எனக் குறிப்பிட்டார். அப்போது கூட அமலாகாது. ஏனெனில், அத்த கைய விதிகளை சட்டத்தில் நுழைத்துள் ளனர்.
முதலில் மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்த வேண்டும். அடுத்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண் டும் என இந்த சட்டம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை செய்வதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றி, அதன்படி, ஒரு ஆணையம் அமைத்து, அப்பணியைச் செய்ய வேண்டும் என, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 கூறுகிறது. 2020-21 க்கான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. 2024 க்கு பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படும எனச் சொல்கிறார்கள். அதன்பிறகு தொகுதி மறுவரையறை செய்ய குறைந்தது 5 ஆண்டுகள் தேவை. எனவே, நமக்கு நல்வாய்ப்பு அமைந்தால்தான் 2034 தேர்தலில் தான் மகளிர் இட ஒதுக்கீடு அமலாகும். அப்போது மோடி அதிகா ரத்தில் இருக்கப் போவதில்லை. 2010 ஆம் ஆண்டு ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட் டது. மோடி அரசு அதைச் சட்டமாக்கி இருக்க முடியும். 9 ஆண்டுகளாக அதைச் செய்யவில்லை. இப்போது பாஜகவும் மோடியும் நடத்துவது வெறும் நாடகம்.
இந்தியா அணி உறுதியாக உள்ளது
எதிர்வரும் நாட்களில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு 2024 நாடாளுமன்ற தேர்த லில் மோடி அரசை வீழ்த்துவது உறுதி. அந்த இலக்குடன் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதில் தமிழ்நாடு ,நாட்டிற்கே வழிகாட்டியாக உள்ளது. இங்கு திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்தி யது மிகப்பெரிய சாதனையாகும். இதே போல நாடு தழுவிய அளவில் பாஜகவைத் தனிமைப்படுத்தி வீழ்த்திட ஒரு வலுவான கூட்டணி நாடு முழுவதும் அமைய வேண்டும்; அத்தகைய ஒற்றுமை இப்போது சாத்தியமாகி இருக்கிறது. மும்பையில் 28 கட்சிகள் ஒன்றாக கூடி ‘இந்தியா’ என்கிற மாபெரும் மேடையாக பணிமித்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. ‘இந்தியா’ என்கிற இந்த தேசிய மேடை யை உருவாக்கியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்தியா அணி யின் 3 கூட்டங்கள் பாட்னா, பெங்களூரு, மும்பையில் நடந்துள்ளன. இந்த மூன்று கூட்டங்களிலும் பங்கேற்று, மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகளை ஒன்றுபடுத்தும் பணியை, ஆக்கப் பூர்வமான முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று மேற்கொண்டது.
இந்த அணி மேலும் வலுப்படும். பாஜக எதிர்ப்பு சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்து வதில் இந்தியா அணியும், அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதியோடு பணியாற்றும். இந்தியா அணி உடனடியாக நாட்டு மக்களிடம் செல்ல இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்க ளைச் சந்திக்க இருக்கிறது. இந்த அணி சேர்க்கைக்கு, மதச்சார்பற்ற ஜனநாயக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணி யில் திரட்டுவதற்கு தமிழ்நாடுதான் முன் மாதிரி என்றும் குறிப்பிட விரும்பு கிறேன். இப்போது நாம் நடத்துவது ஒரு விரி வான ஒற்றுமையை கட்டி, ஆர்எஸ்எஸ் - பாஜகவின் இந்துத்துவா ராஜ்ஜியம் என்ற கோட்பாட்டிற்கு எதிரான தத்து வார்த்த, அரசியல் போராட்டமாகும். அத்தகைய போராட்டத்தை நடத்து வதற்கான வழிகாட்டியாக தமிழ்நாட் டில் திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் ஒன்றுபட்டு நடத்துகிற போராட்டம் திகழ்கிறது. இந்த இரண்டு இயக்கங்களும் சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிராக, சாதியக் கொடுமை களுக்கு எதிராக; அரசியலையும், பகுத்தறிவையும் உயர்த்திப் பிடித்து அரசியல் தத்துவார்த்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டத்தில் தீக்கதிர் மற்றும் முற்போக்கு பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு பிரகாஷ் காரத் கூறி னார். அவரது உரையை தீக்கதிர் ஆசிரி யர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார்.