states

img

2021-ஆம் ஆண்டில் 6,084 வழக்குகள் பதிவு

சென்னை, செப்.23- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 39.8 சதவீதம் அதிகரித்துள்ளது இதையடுத்து காவல்துறை அதிகாரிகளிடம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம்   அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டில் 15 வழக்குகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், பத்து மற்றும் ஏழு வழக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டை விட 39.8 சதவீதம் அதி கரித்துள்ளதால் மாநில குற்ற ஆவணக் காப்பகம் அனைத்து மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை துணை ஆய்வாளர்கள்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் உண்மையான கார ணங்கள் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வலியுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டில் 4,139  வழக்குகள், 2020-ஆம் ஆண்டில் 4,338 வழக்கு கள் பதிவாகியிருந்தன. இது 2021-ஆம் ஆண்டில் 6,084-ஆக அதிகரித்துள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தை களைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின்  கீழ் மூன்று பாலியல் பலாத்கார வழக்கு கள் உட்பட 69 வழக்குகள்  தமிழகத்தில் பதி வாகியுள்ளன. இதில் 18 வழக்குகள் குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற வழக்குகள். எட்டு வழக்குகள் தற்கொலை க்குத் தூண்டிய வழக்குகள் தவிர குழந்தைகள் தாக்குதலுக்குள்ளான வழக்கு களும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ்  சென்னையில் 435 வழக்குகளும், கோயம் புத்தூரில் 81 வழக்குகளும் பதிவாகி யுள்ளன. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கூடுதல் காவல்துறை இயக்குநராக இருந்த ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர்  எம்.ரவி கூறியதாவது: ​ குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியக் கார ணம். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான்.  குழந்தைகளை குறிவைத்து நடத்தப் படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு  கார ணத்தைக் கண்டறிய கடந்த சில வரு டங்களாக பதிவாகியுள்ள போக்சோ வழக்கு களை ஆய்வு செய்தபோது, குற்றச்சாட்டப் படும் சிறுவர்கள் ஆபாசப்படங்கள் பார்ப்பதை கண்டறிந்தோம். சிறுவர்கள் பயன்படுத்தும் மொபைல்போன்கள் இதை  உறுதிப்படுத்துகிறது.