states

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான்

மாஸ்கோ, ஜூலை 1- சீனாவைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக ஈரான் இணைய வுள்ளது. 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட இந்த அமைப்பு பாதுகாப்புப் பிரச்ச னைகளை இணைந்து  எதிர்கொள்வது, ராணுவ ரீதியான ஒத்துழைப்பது மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஆகிய அம்சங்களை முன்வைத்தது. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  இந்த அமைப்பில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு 2006 ஆம் ஆண்டில் ஈரான் விண்ணப்பித்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில்தான் அவர் களது விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்தது. அந்நாட்டை இணைப்பதற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கின. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உறுதி மொழிப் பத்திரத்தில் ஈரான் கையெழுத்திட் டது. அக்டோபர் 2022ல் ஈரான் நாடாளு மன்றத்தில் இதில் சேருவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. ஜூலை மாதம் 4 ஆம் தேதியன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலை வர்கள் பங்கேற்கும் கூட்டம் இந்தியத் தலைநகர் புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஈரானை முழு உறுப்பி னராக சேர்ப்பதற்கான ஒப்புதல் வழங்கப் படும். ஈரானின் இணைப்பால் இந்த அமைப்பின் வர்த்தக அளவு மேலும் அதிக ரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா வின் பொருளாதாரத் தடைகளை உடைக்க வும் இந்த முழு உறுப்பினர்கள் அந்தஸ்து  ஈரானுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.