பாட்னா, டிச.7- தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் (தலித் சோஷன் முக்தி மஞ்ச் – டிஎஸ்எம்எம்) 3வது அகில இந்திய மாநாடு பீகார் மாநி லம் பெகுசராயில் 2022 டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் எழுச்சியோடு நடை பெற்றது. துவக்க நாளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி பங் கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற் றது. பெண்கள், இளைஞர்கள் உள் ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக் கள் கூடி நின்ற பொதுவெளியில், பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை யெச்சூரி விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி பங்கேற்று, மோடி அரசின் மனு வாத தன்மையையும் அது பெண்க ளுக்கு எத்தகைய பாதகமான விளை வுகளை ஏற்படுத்தி வருகிறது என்ப தையும் விளக்கி சிறப்புரையாற்றி னார். டிஎஸ்எஸ்எம் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ராமச்சந் திர தோம், பெகுசராயின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சிங் ஆகியோர் பீகார் மாநிலத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் பற்றியும் உரிய முறையில் செய்த தலையீடுகளின் மூலமாக கிடைத் துள்ள வெற்றிகளைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.
பிரதிநிதிகள் மாநாடு
பிரதிநிதிகள் மாநாடு 3ம் தேதி மாலை, டிஎஸ்எம்எம் கொடியை அமைப்பின் தலைவரும், கேரள அற நிலையத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சருமான கே.ராதா கிருஷ்ணன் ஏற்றியதோடு துவங்கி யது. விண்ணதிரும் பல மொழி கோஷங்களுக்கு இடையே கொடி யேற்றிய நிகழ்வு உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்றது. அற்பு தமாக வடிவமைக்கப்பட்டிருந்த, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தங் கள் இன்னுயிரை நீத்த போராளி களுக்கான நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு புரட்சி கர வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், மாநாட்டினுடைய தலை மைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்குழுவில் தமிழகத்திலிருந்து கே. சாமுவேல்ராஜ் இடம் பெற்றார். தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக் கான வேலை-அமைப்பு அறிக்கை யை பொதுச்செயலாளர் ராமச்சந் திர தோம் முன்மொழிந்தார். இரண்டாம் நாள் காலை மாநாட்டை துவக்கிவைத்து ஒடுக் கப்பட்ட மதச்சிறுபான்மையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் அன்வர் அலி, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய அளவில் தலித் மற்றும் மதச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதையும் அதை எதிர்த்துக் களமாட ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியத்தை யும் வலியுறுத்திப் பேசினார். பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் விவாதத் தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தோழர்கள் கே. வேணி, பழ. வாஞ்சிநாதன், சே. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று தமிழகத்தின் அனுபவங்கள், தீண்டாமை ஒழிப்பில் ஏற்படுத்திய தாக்கங்களையும் வெற்றிகளை யும் கோடிட்டுக் காட்டினர். மாநாட்டு அறிக்கையில், தமிழக களப் போராட்டங்கள் முன்மாதிரியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந் தது. மாநாட்டை வாழ்த்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் பி.வெங்கட் இன்றைய நிலைமை யில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் பட்டியலின மக்களை ஒன்றுதிரட்டி உரிமைகளை வென் றெடுப்பதற்கு இரு அமைப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தினார். நடைபெற்ற விவாதத்துக்கு பொதுச்செயலாளர் தொகுப்புரை வழங்கிய பிறகு, மாநாடு வேலை அறிக்கையை ஏற்றுக்கொண்டது. தகுதி ஆய்வுப் படிவ தொகுப்பு அறிக்கையையும் வரவு செலவு அறிக்கையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
நிர்வாகிகள் தேர்வு
நிறைவாக, தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் தலைவ ராக கே.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளராக ராமச்சந்திர தோம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தமிழகத்திலிருந்து அமைப்பின் அகில இந்திய நிர்வாகி களாக கே.சாமுவேல்ராஜ் (துணைத் தலைவர்), க.சுவாமி நாதன் (துணைச் செயலாளர்) தேர்வுசெய்யப்பட்டனர். நிர்வாகக் குழுவுக்கு த.செல்லக்கண்ணு, இ.மோகனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவுரையில் சுபா ஷினி அலி எதிர்காலக் கடைமை களையும் செல்ல வேண்டிய பாதை யையும் விளக்கி பேசினார். மாநாட்டில் இந்தியா முழுவதுமி ருந்து 324 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 30 பிரதிநிதி கள் கலந்துகொண்டனர். பட்டியலின பழங்குடி மக்க ளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி அதை தடுப்பதற்காக இயற்றப்பட்ட வன்கொடுமை திருத்தச் சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்து வதில் தீவிர கவனம் செலுத்த வேண் டும், பட்டியல் பழங்குடியினருக் கான துணைத்திட்ட நிதி அமலாக் கத்துக்கான சட்டம் இயற்ற வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதியற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்கு வதற்கான உத்வேகத்தோடு பிரதி நிதிகள் சென்றனர். பாட்னாவிலிருந்து என்.சிவகுரு