states

கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிகம் ‘கெயில் இந்தியா’ லாபம் ரூ. 3 ஆயிரத்து 251 கோடி

புதுதில்லி, ஆக. 17 - பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ‘கெயில் இந்தியா’ 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல்  ஜூன் வரை) ரூ. 3 ஆயிரத்து 250 கோடியே 95 லட்சத்தை நிகர லாபம் ஈட்டியுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடு பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ‘கெயில் இந்தியா’ நிறுவனம் தனது ஜூன்  காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளி யிட்டுள்ளது. இதில், ‘கெயில் இந்தியா’ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ரூ. 3 ஆயிரத்து 250 கோடியே 95 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 51 சதவிகிதம் அதிகமாகும். ஏனெனில் 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் ‘கெயில் இந்தியா’ நிறுவனம் ரூ. 2 ஆயிரத்து 157 கோடியே 15 லட்சம்  என்ற அளவிலேயே ஒட்டுமொத்த அளவில் நிகர லாபம் ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் ‘கெயில் இந்தியா’ ஒட்டுமொத்த வருவாயாக ரூ. 38  ஆயிரத்து 033 கோடியே 30 லட்சத்தை  ஈட்டி யுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலா ண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் ‘கெயில் இந்தியா’ நிறுவனத்தின் வருவாய் ரூ. 17 ஆயிரத்து 702 கோடியே 43 லட்சம் என்ற அளவில் இருந்தது.

;