புதுதில்லி, நவ. 13- 2022-23 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதத்தில்)- எல்ஐசி நிறுவனம் ரூ. 15 ஆயிரத்து 952 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், ஆயிரத்து 433 கோடியை மட்டுமே எல்ஐசி ஒருங்கி ணைந்த நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலையில், தற்போது 11 மடங்கு லாபம் அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் முதல் காலா ண்டின் (ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான 3 மாதம்) நிகர லாபமான ரூ. 682 கோடியோடு ஒப்பிட்டால், அடுத்த 3 மாதங்களில் சுமார் 23 மடங்கு லாபம் அதிகரித்துள்ளது. எல்ஐசி-யின் நிகர பிரீமியமும் உயர்ந்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம் கோடியாக இருந்த நிகர பிரீமியம் வருவாய், நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலா ண்டில் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ.8 ஆயிரத்து 198 கோடியே 30 லட்சம் அளவிலேயே முதலாண்டு பிரீமியம் வசூலாகி இருந்தது. அது தற்போது 11 சதவிகி தம் அதிகரித்து, 9 ஆயிரத்து 124 கோடியே 07 லட்சம் ரூபாயாக அதி கரித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிரீமிய வளர்ச்சி விகிதமானது 2 சதவிகிதம் அதிகரித்து, 56 ஆயிரத்து 156 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல ஒற்றைப் பிரீமிய வசூ லானது 62 சதவிகிதம் அதிகரித்து, 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயாக அதி கரித்துள்ளது. இதன் நிகர வருவாயில் முதலீட்டின் பங்கு கடந்த ஆண்டினை காட்டிலும் 10 சதவிகிதம் அதிகரித்து, 84 ஆயிரத்து 104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எல்ஐசி-யின் மொத்த செயல்படாக் கடன் மதிப்பு (Non Performing Assets - NPA) செப்டம்பர் காலாண்டில், 26 ஆயிரத்து 111 கோடி ரூபாயாக குறைந் துள்ளது. இது முந்தைய காலாண்டில் 26 ஆயிரத்து 619 கோடி ரூபாயாகவும், கடந்த ஆண்டில் 28 ஆயிரத்து 929 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல மொத்த வராக்கட னும் கடந்த ஆண்டில் 6.57 சதவிகித மாகவும், முந்தைய ஜூன் காலாண்டில் 5.84 சதவிகிதமாகவும் இருந்தது, தற்போது 5.60 சதவிகிதமாக குறைந்துள்ளது.
எல்ஐசி-யில் (Life Insurance Corporation of India) ஒன்றிய அரசுக்கு இருக்கும் 100 சதவிகித பங்குகளில் 3.5 சதவிகிதத்தை கடந்த மே மாதம் பங்குச் சந்தைக்கு கொண்டுவந்தது. ஆரம்பப் பொதுச்சலுகை (Initial Public Offering - IPO) அடிப்படை யில் மோடி ஒரு பங்கின் வெளியீட்டு விலை யை 949 ரூபாயாக நிர்ணயித்து மொத்தம் 22 கோடியே 30 லட்சம் பங்குகளை விற்றது. இந்த விற்பனையின் மூலம் மோடி அரசுக்கு கிடைத்தது 20 ஆயி ரத்து 557 கோடி ரூபாய் மட்டும்தான். ஆனால், கடந்த 6 மாதங்களில் எல்ஐசி நிறுவனம் தனது சொத்து மதிப்பில் - சுமார் இரண்டரை லட்சம் கோடியை இழந்துள்ளது. எல்ஐசி பங்குகளின் மதிப்பு ரூ. 872-இல் இருந்து தற்போது 627 ரூபாயாக சரிந்துள்ளது. ஜூன் காலாண்டு லாபமும் வெறும் ரூ. 683 கோடி ஆனது. ஒன்றிய அரசு இவ்வாறு எல்ஐசி நிறுவனத்தை சூறையாடும் முயற்சி யில் தொடர்ந்து ஈடுபட்டாலும், முகவர் கள், ஊழியர்களின் உழைப்பால், எல்ஐசி நிறுவனம் 2022-23 நிதி யாண்டின் இரண்டாவது காலாண்டில் 11 மடங்கு லாபமீட்டி சாதனை படைத்துள்ளது.