states

img

திரிபுராவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

மாதர் சங்கம் கண்டனம்

அகர்தலா, ஜூன் 7- பாஜக ஆளும் திரிபுராவில் 2023 ஏப்ரல் 15 முதல் ஜூன் 1 வரை 45 நாட்களில் பெண்க ளுக்கு எதிரான 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றதில் இருந்து மாற்றுத் திற னாளிகள், பழங்குடியின பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை கள், கும்பல் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அதிர்ச்சியும், கண்டனமும் வெளி யிட்டுள்ளது. ஏப்ரல் 12 அன்று சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான செய்தி பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்திய ஒரே வாரத்தில் ஏப்ரல் 23 அன்று பாஜக குண்டர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு மே 2 அன்று மனவளர்ச்சி குன்றிய பெண் மீதான பாலியல் வன்முறை, மே 9 அன்று அகர்தலாவில்  கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, மே 14 அன்று லாங் தாரை பள்ளத்தாக்கில் உள்ள கோமதி மற்றும் லால்சரா ஆகிய இடங்களில் இரு பழங்குடியின சிறுமிகள் கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் ஆகியவை நிலைமையின் தீவிரத்தை அதிகமாக்கியது.

இதைத்தொடர்ந்து மே 24 அன்று 8 வயது சிறுமியும் மே 28 அன்று 11 வயது சிறுமியும் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்குற்றங் கள் தீவிரமடைந்தன. ஜூன்-1 அன்று 5 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மறுதினமே 14 வயது சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். அன்றைய தினம் ஐடிஐ மாணவி ஒருவர் கடத்தப்பட்ட போது அங்கு வன்முறை வெடித்தது. ஏற்கெனவே திரிபுராவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நிர்மல் பிஸ் வாஸ், 2022ல் திரிபுரா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது,  உள்துறை அமைச்சரும், தற் போதைய மாநில முதல்வருமான மாணிக் சாஹா  சமர்பித்த அறிக்கையில் 2020 முதல் 400 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஏழு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப் பட்டுள்ளார்கள்; பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்களில் 1,174 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்  என தெரிவித்திருந்தார். அத்துடன் ஒப்பிடும் போது, தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ‘‘இது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாது காப்பில்லை என நிலைமையின் தீவிரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் உண்மை கண்டறி யும் குழுவை அமைத்து வழக்குகளை விசா ரிக்கவும் வேண்டும்” என்று மாநில மகளிர் ஆணையத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

;