states

தீக்கதிர் விரைவு செய்திகள்

22% ஈரப்பத நெல் கொள்முதல் ஆகுமா?

புதுதில்லி, அக்.14-  அதிக ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு தமிழகம் வருகிறது. 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழகம் வருகிறது. தமிழக அரசின் கோரி க்கை அடிப்படையில் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு நடத்த உள்ளது.

ஆப்கனில் கல்லூரி நுழைவுத்தேர்வு  எழுத பெண்களுக்கு அனுமதி

காபூல், அக்.14- ஆப்கானிஸ்தானில் தலி பான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக, பல் கலைக்கழக நுழைவு தேர்வில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர். ஆப்கனில் பெண்கள் கல்வி  கற்பதற்கு, தலிபான்கள் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், காபூல் பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு எழுது வதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் வியாழனன்று முதன் முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் ட்ரோனை  வீழ்த்திய பாதுகாப்புப்படை

சண்டிகர், அக்.14- பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ் தான் ட்ரோனை, இந்திய எல்லை  பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து, இந்திய பகுதிக்குள் ட்ரோன் ஒன்று வெள்ளியன்று அதி காலை நுழைந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படையினர், ட்ரோனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

நவ.12 இமாச்சலப் பிரதேச தேர்தல்

புதுதில்லி, அக்.14- இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் தலைமை  தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இத்துடன் குஜராத் சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அறிவிப்பு வெளியாகவில்லை.

கோவையில் பிஎப்ஐ  அலுவலகங்களுக்கு சீல்

கோயம்புத்தூர், அக்.14- கோவையில் 2 இடங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு வட்டாட்சி யர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்ததாக எழுந்த புகாரில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு  இந்தியாவில், 5 ஆண்டுகளுக்கு செயல்பட ஒன்றிய அரசு தடை விதித்த நிலையில், கோவை கோட்டைமேடு மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழக அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு போனஸ் அறிவிப்பு

சென்னை, அக்.14-  தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்று வோருக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறு வன தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  அக்.24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்று வோருக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம், போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அசாம் பாஜக முதல்வருக்கு ‘இசட் பிளஸ்’

நீண்ட காலம் காங்கிரசில் இருந்துவிட்டு பாஜக-வுக்கு தாவியவரும், தற்போதைய அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா வுக்கு வடகிழக்கு பிராந்திய அளவிலான ‘இசட் மைனஸ் (Z-) பாதுகாப்பு வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கான பாதுகாப்பை இசட் பிளஸ் (Z+) ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. இதன்படி, இந்திய அளவில் அவருக்கு சிஆர்பிஎப் வீரர்களின் பாது காப்பு வழங்கப்படும். 

பகவத் புகழ்பாடிய இமாமிற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

அகில இந்திய இமாம் களின் அமைப்புத் தலைவ ரான உமர் அகமது இல்யாசி, அண்மையில் நிகழ்ச்சி ஒன் றில் பேசுகையில், “ஆர்எஸ் எஸ் தலைவர் மோகன் பக வத், இந்தியாவிற்கு தேசத் தந்தையை போன்றவர்” என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி யது. இல்யாசிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங் கள் குவிந்தன. இந்நிலை யில், இல்யாசிக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கூறி, அவருக்கு, ஒன்றிய பாஜக அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்த ரவிட்டுள்ளது. 

பாஜகவினர் வீட்டிற்குள்ளும்  சிபிஐ நுழையும்!

“இன்று நீங்கள் (பாஜக) ஆட்சியில் இருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரத்தை காட்டுகிறீர் கள். ஆனால் நாளையும் நீங் களே ஆட்சியில் இருக்க முடியாது. அப்போது இதே மத்திய புலனாய்வு அமைப்புகள் உங்கள் வீட்டுக் குள் வந்து உங்கள் காதைப் பிடித்து இழுத்துச் செல்லும்” என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் 

சிட்னி, அக்.14- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் இனவெறி  காரணமாக தாக்கப்பட்டுள் ளார். அவர் உடலில் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளதாக, அவ ரின் குடும்பத்தினர் தெரிவித்துள் ளனர். சிட்னியில் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்பப் பயிற்சி பெறும் 28 வய தான இந்தியர் சுபம் கார்க்,  கடந்த 6-ஆம் தேதி தாக்குத லுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆக்ராவில் வசிக்கும் அவரது பெற்றோர், இது இன வெறித் தாக்குதல் எனவும், கடந்த ஏழு நாட்களாக விசா வுக்காக போராடி வருவதாக வும் கூறியுள்ளனர்.

பட்டாசு வெடிக்க தடை கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுதில்லி, அக்.14-  நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரிய மனுவை  விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், பட்டாசு வெடிக்க முழுமை யாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுதார் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிட்டார். இம்மனுவை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக மனுதாரர் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் தலையிட்டால் பட்டாசுத் தொழிலில் முதலீடு செய்திருப்ப வர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தீபாவளி பண்டிகைக்கு பின்னர், மனுதாரர் நீதிமன்றத் தை அணுகலாம் என்று தெரிவித்தனர்.