states

img

ஒன்றிய இணையமைச்சர் ராவ் இந்திரஜித் பேச்சு மோடி பெயரை வைத்து மட்டுமே ஹரியானாவில் ஓட்டு வாங்க முடியாது!

சண்டிகர், அக். 15 - “ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பெயரை வைத்து மட்டுமே ஓட்டு வாங்கிவிட முடி யாது; பாஜக-வினர் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என ஒன்றிய  அரசின் திட்டம் மற்றும் நிறுவன  விவகாரங்கள் துறை இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் பேசியுள்ளார். ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில்தான் ராவ் இந்திரஜித் சிங் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடியால், 2014  தேர்தலில் வென்று ஆட்சி அமைத் தோம். இதையடுத்து பல மாநிலங்களி லும் ஆட்சியை கைப்பற்றினோம். ஹரியானாவிலும் முதன் முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால், அடுத்து 2017-இல் நடந்த தேர்தலில், ஏற்கெனவே பெற்றதை விட ஏழு இடங்கள் குறைவாக கிடைத்தது. இருந்த போதிலும் ஆட்சி அமைத் தோம். ஆனால், மூன்றாவது முறை யாக 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெறும் மோடிஜி  பெயரை மட்டும் வைத்து வாக்கு களைப் பெற முடியாது. பாஜக  தொண்டர்கள் களத்தில் இறங்கிப்  பணியாற்ற வேண்டும். அப்போது தான், மொத்தம் உள்ள 90 தொகுதி களில் 45 இடங்களையாவது கைப்பற்ற முடியும்” என்று ராவ் இந்திரஜித் சிங் பேசியுள்ளார்.

;