சென்னை, அக். 17- காலணிகள் தயாரிப்பில் இந்தியா வின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் விகேசி குழுமம் சென்னையில் தனி விற்பனையகத்தை திறந்துள்ளது. இந்த சென்னை விற்பனையகத்தை விகேசி குழுமத்தின் தலைவர் விகேசி மாமெத் கோயா மை திறந்து வைத்தார். இந்த விற்பனையகத்தில் விகேசி ப்ரைட், விகேசி டெபான், குட் ஸ்பாட், ஈஸி, டெபான்கோ ஜா.மே.கா. உட்பட விகேசியின் அனைத்து பவர் பிராண்டு களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ‘மை விகேசி’ ஸ்டோர்ஸ் மூலம், இந்தியாவில் உள்ள சாமானி யர்களின் தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்வதாக விகேசி குழு மத்தின் நிர்வாக இயக்குநர் விகேசி ரசாக் கூறினார். செருப்புகள், உடைகள், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள், ஆர்த்தோ கேர் காலணிகளும் இந்த விற்பனை யகத்தில் கிடைக்கும். விகேசி எப்போ தும் ஷாப் லோக்கல் (#ShopLocal) கருத்துக்காக பிரச்சாரம் செய்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றின் போது நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தரக் கடைக்காரர்கள் மற் றும் வணிகங்களை உற்சாகப்படுத்த வும், புத்துயிர் பெறவும், ஷாப் லோக் கல் பிரச்சாரத்தை நாடு முழுவதும் தொடங்கிய முதல் நிறுவனம் விகேசி என்றும் அவர் தெரிவித்தார்.