states

தீக்கதிர் விரைவு செய்திகள்

டுவிட்டர் பயனர்களுக்கு கட்டணம்

நியூயார்க், டிச. 12 - டுவிட்டர் “புளு டிக்” பயன் பாட்டாளர்களுக்கு திங்க ளன்று முதல் கட்டண திட்டம் அமலுக்கு வந்தது. வெப் பயன்பாட்டாளர்களுக்கு 8  டாலர்களும், ஐஓஎஸ் பயன் பாட்டாளர்களுக்கு 11 டாலர் களும் மாத கட்டணமாக வசூ லிக்க உள்ளதாக டுவிட்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந் தது. டுவிட்டர் அதிபர் எலன் மஸ்க், டுவிட்டர் நிறு வனத்தை கையகப்படுத்திய வுடன் வெளியிட்ட இந்த அறிவிப்பால் கடும் விமர்சனம் எழுந்தது.

‘காஷ்மீரில் வளர்ச்சி சாத்தியமில்லை’

ஸ்ரீநகர், டிச.12 - ஜம்மு - காஷ்மீர் மக்க ளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப் படாத மற்றும் மதிக்கப்படாத வரை அவர்களின் அனைத்துத் துறை வளர்ச்சி பற்றிய பேச்சுக்கள் சமாளிப் பாகவே இருக்கும் என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா  கூறியுள்ளார். 

உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபாங்கர் தத்தா!

புதுதில்லி, டிச.12 - மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, உச்சநீதிமன்ற நீதிபதி யாக, திங்களன்று பதவியேற் றுக் கொண்டார். அவருக்கு இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிர மாணம் செய்து வைத்தார். கடந்த 1965-இல் பிறந்த தத்தா, கொல்கத்தா உயர்  நீதிமன்ற மறைந்த முன்னாள் நீதிபதி சலீல்குமாா் தத்தா வின் மகன் ஆவார். 1989-இல் கொல்கத்தா பல்கலைக்கழ கத்தில் சட்டப் படிப்பு முடித்த  இவர், உச்சநீதிமன்றத்தி லும், பல்வேறு உயர் நீதிமன் றங்களிலும் அரசியல் சாசனம் மற்றும் உரிமை யியல் சார்ந்த விவகாரங் களில் வழக்கறிஞராக பணி யாற்றியுள்ளார். நீதிபதி தத்தா பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆகியுள் ளது. இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன.

இந்தியாவில் நூறு இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் காந்தி

புதுதில்லி, டிச.12- இந்தியாவில் 100 இளை ஞர்களில் 42 பேர் வேலை யில்லாமல் உள்ளனர். 45  ஆண்டுகாலத்தில் வேலை யின்மை என்ற சாதனையை பாஜகவினர் படைத்துள்ள னர். இந்திய இளைஞர் களின் அவல நிலையை வேலையின்மை புள்ளிவிவ ரங்கள் தெளிவாகக் காட்டு கின்றன என்று காங்கிரஸ்  எம்.பி. ராகுல் காந்தி டுவிட் டரில் குறிப்பிட்டுள்ளார். “பிரதமரே, இன்று நாட்டின் இளைஞர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்பு ளங்களும் உள்ளன, ஆனால்  அவர்கள் தங்கள் வேலை வாய்ப்பைப் பெற்று நாட்டை ஒருங்கிணைக்கும் வரை பய ணத்தை நிறுத்த மாட்டார் கள்” என்றும் ராகுல் தெரி வித்துள்ளார்.

1,200 தொழிலாளர் பணிநீக்கம்

ஃபியட், ஜீப் மற்றும் டாட்ஜின் ஆகிய வாகனங்களின் உற்பத்தியாளரான ஸ்டெல்லாண்டிஸ், 1,200 தொழி லாளர்களை பணிநீக்கம் செய்வதாகவும், அமெரிக்கா வின் இல்லினாய்ஸில் உள்ள ஜீப் ஆலையில் காலவரை யின்றி செயல்பாடுகளை நிறுத்துவதாகவும் அறிவித்துள் ளது. எலெக்ட்ரிக் வாகனங்களில் முதலீடு செய்வதால் செலவுகளைக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜீப் செரோகி எஸ்யூவி ரக கார்களை உற்பத்தி செய்யும் ஆலை, பிப்ரவரி 28 முதல் உற்பத்தியை நிறுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

எரிபொருள் தேவை அதிகரிப்பு 

இந்தியாவின் எரிபொருள் தேவை நவம்பரில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது என்று அரசாங்க தரவு காட்டுகிறது. பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) தரவுகளின்படி, எரிபொருள் நுகர்வு  முந்தைய மாதத்தை விட நவம்பரில் 2.4% அதிகமாக இருந் தது;  பெட்ரோல் விற்பனை 10.2% அதிகரித்து 18.84 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டை விட டீசல் விற் பனை 19.1% அதிகரித்து 7.76 மில்லியன் டன்னாக உள்ளது.

இந்தியாவில் ‘பிக் டெக்’ வேலை வாய்ப்பு 95% குறைந்துள்ளது

கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமே சான் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியமர்த்தல், இந்தியா வில் வழக்கமான பணியமர்த்தல் அளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 95% குறைந்துள்ளது என்று சிறப்பு பணியா ளர் நிறுவனமான Xpheno தெரிவித்துள்ளது. தற்போது 2,000க்கும் குறைவான வேலை வாய்ப்புகளே அளிக்கப் பட்டுள்ளன என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது. ஜூலை-ஆகஸ்டில் 9,000 ஆக இருந்த வேலைவாய்ப்பு, அக்டோபர் நடுப்பகுதியில் 4,000 ஆகக் குறைந்தது.

இந்து மக்கள் கட்சி மீது  நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தல்

சென்னை,டிச.12- பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை தொடர்ந்து அவமதித்து வரும் இந்து மக்கள் கட்சி மீது மாநில அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தொல்.திருமாவளவன் வலியுறுத்தி னார். புரட்சியாளர் அம்பேத்கர் காவி  உடை அணிவது போன்ற தோற்றத்தை  உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் திங்களன்று(டிச.12) ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்  அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இந்து மக்கள் கட்சியினர் அண்ணல்  அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி  பேசுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ கத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு  தலைவர்களையும் இதே போல் இழி வுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

தங்கம் விலை சவரனுக்கு  ரூ.80 குறைந்தது

சென்னை,டிச.12- தங்கம் விலை கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு, தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.40,440-க்கு விற்கப்பட்டது. திங்களன்று(டிச.12) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,360-க்கு விற்கப்ப டுகிறது. இதேபோல் வெள்ளி விலை யும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து  ரூ.72.80-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,800-க்கு விற்பனை யானது.

645 டன் மரக்கழிவுகள் அகற்றம்

சென்னை,டிச.12- சென்னை: ‘மாண்டஸ்’  புயலினால் சென்னை மாந கரின் பல்வேறு பகுதிகளி லும் மரங்கள் வேரோடும், ஒரு சில இடங்களில் மரக் கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்க ளும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கிளைக ளும் ஆங்காங்கே சாலை களில் விழுந்தன. இந்த  மரக்கிளைகள் அனைத் தையும் மாநகராட்சி பணி யாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்றத் தொடங்கினர். அந்தவகையில் 644 டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பர் லாரிகளின் மூலம் மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.