states

img

தேசிய கல்விக் கொள்கையை கைவிட மாணவர் பெருமன்ற மாநாடு வலியுறுத்தல்

சென்னை, பிப். 8- ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தேசிய கல்விக்  கொள்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு சென்னையில் தோழர் மு.செல்லமுத்து நினைவரங்கில் திங்களன்று (பிப். 6) துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மௌ.குணசேகர் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சீ.தினேஷ் வேலை அறிக்கையை சமர்பித்தார். “வர்க்க அணிதிரட்டலில் மாண வர்கள்” என்ற தலைப்பில் ஏஐடியுசி  தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி,  “மக்களுக்கான கல்விக் கொள்கை”  என்ற தலைப்பில் பொது பள்ளிக ளுக்கான மாநில மேடை பொதுச்செய லாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பேசினர். தேசிய தலை வர் சுவம் பானர்ஜி மாநாட்டை நிறைவு  செய்து பேசினார். வரவேற்புக்குழு பொருளாளர் கீ.சு.குமார் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண் டும், அரசு உதவி பெறும் கல்லூரி களை தனியார் கல்லூரிகளாக மாற்றும் முயற்சிகளை ஒன்றிய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த  வேண்டும், நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாநிலத் தலைவராக தினேஷ் சீரங்கராஜ், செயலாளராக பா.தி னேஷ், பொருளாளராக க.இப்ராகிம், துணைத் தலைவர்களாக, ஆ.பிர காஷ், வெ.நிருபன், பா.சினேகா, ரா.விக்ரம், துணைச் செயலாளர்க ளாக, ஜே.பி.வீரபாண்டியன், இரா.ராமசாமி, முத்துலெட்சுமி, பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

;