states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலகின் பிரபல மென் பொருள் நிறுவனமான சேல்ஸ் போர்ஸ் (SALES  FORCE) 4,000 ஊழியர்  களை வெளியேற்றுவ தாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10% (சுமார் 7,000) ஊழியர் களை நீக்கிய சேல்ஸ் போர்ஸ் ஒரு மாத இடை வெளியில் 4,000 பேரை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ஆம்  ஆண்டு 13.7 பில்லியன்  டாலரை இழந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள் ளது. கடந்த ஆண்டை விட 34% அதிகமான இழப்பை சந்தித்துள்ள மெட்டா, 2021-இல்  10.2 பில்லியன் டாலர்  இழப்பை எதிர்கொண் டது. 

பாஜக ஆளும் அசாம் மாநி லத்தில் கடந்த 2 நாட்கள் மட்டும் குழந்தை திரு மணங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 2,000-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-வது கூட்டம் தில்லி யில் பிப்., 18-ஆம் தேதி நடைபெற உள்ளது என  ஜிஎஸ்டி கவுன்சில் டுவீட்  டில் தகவல் தெரிவித் துள்ளது.

இனி வரும் காலங்களில் இந்தியாவில்  புற்று நோயால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள் ளது. 2026-ஆம் ஆண்டிற் குள் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சமாக உயரும் என  இந்திய மருத்துவ அறி வியல் கழகம் (AIIMS)  அறிக்கை வெளியிட்டுள் ளது. தற்போதைய கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13-14 லட்சம் பேரை  புற்றுநோய் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக் கது.

உச்சநீதிமன்றத்துக்கு பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை  நியமிக்க குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்  டேட் மேலாளர் நடராஜ னின் நண்பரும், அப்போ தைய அதிமுக அம்மா  பேரவை  மாவட்ட துணை செயலாளருமான கர்சன் செல்வம் உள்ளிட்ட 3  பேருக்கு சிபிசிஐடி போலீ சார் சம்மன் அனுப்பி யுள்ளனர். சிபிசிஐடி விசா ரணை அலுவலகத்தில் 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு உத்தரவும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உக்ரைனுக்கு லியோ பார்ட் 1 (Leopard 1) போர்  டாங்கிகளை வழங்குவ தாக ஜெர்மனி அறி வித்துள்ளது. லியோ பார்ட் 1 டாங்கிகள் 2-ஆம் உலகப்போருக்கு பின் ஜெர்மனி உருவாக்கிய முதல் டாங்கி ஆகும்.

திமுக கூட்டணிக்கு கம லின் ஆதரவு வலு சேர்க்  கும் என்று கருதவில்லை என விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமாவள வன் எம்பி கருத்து தெரி வித்துள்ளார்.