states

அதற்கு காரணம் கம்யூனிசம்!

பத்திரிகையாளர் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு கூஜா தூக்கி வரும் சவுக்கு சங்கர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டத்தை தனது டிவிட்ட ரில் டேக் செய்து, “ஏன், புதுக் கோட்டை தலித் விவகாரத்துக்கு இந்த கோவம் வரல” என்று போகிற போக்கில் ஒரு வரியை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கே தெரியும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடி நீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த பிரச்சனை தெரியவந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று இப்பிரச்சனையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை என்பது. அப்போது முதல்  இப்போது வரை தொடர்ந்து அப்பிரச்சனையில் விடாப்பிடி யான போராட்டத்தை நடத்தி வரு வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.

அடுத்த சில நாட்களிலேயே அங்கு நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் நேரில் பங்கேற்றார். பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்தார். மனிதக் கழிவை கலந்த குற்றவாளிகளை கண்டறியாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பிரச்சனையை திருப்புவதற்கு காவல்துறை தரப்பில் முயற்சி நடக்கிறதோ என்ற ஐயத்தையும் எழுப்பி தமிழ்  நாடு அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்றிருப்ப தும் மார்க்சிஸ்ட் கட்சியே. மனிதக் கழிவு கலந்து, தீண்டாமையின் சின்னமாக மாறிவிட்ட அந்த தண்ணீர் தொட்டியை இடிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் உறுதியான போராட்டத்தை நடத்தியுள்ளது. இவை அனைத்தும் தெரிந்தே, கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான சவுக்கு சங்கர், கம்யூனிஸ்ட்டுகள் மீது அவதூறு பிரச்சாரத்தை நடத்தியுள்ளார்.இவர் போன்ற வர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் சற்குணம் எழுதிய ஒரு பதிவை கார்க்கி விஜய் எனும் டிவிட்டர் ஆர்வலர் பதிவிட்டுள்ளார்.

“தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பலப்பட்டு ஒரு கம்யூ னிஸ்ட் கட்சி கிராமம். மற்ற கிரா மங்களிலிருந்து முற்றிலும் மாறு பட்டது என்னுடைய கிராமம். ஒரு தலித்தின் பெயரில் பூங்கா திறந் தது எங்கள் கிராமத்தில்தான். தலித்துக்களுக்கும் மற்ற சாதி யினருக்குமான உறவே மாமன், மச்சான் உறவுதான். சாதி யத்திற்கான அடையாளமாக அங்கு எதையுமே பார்க்க முடி யாது. சாதி கட்சிகளின் கொடி களை அங்குள்ள தலித்துக்களோ, முக்குலத்தோரோ ஏற்றிய தில்லை. அதற்கு காரணம், கம்யூ னிசம்!” தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தலித் மக்களை மட்டு மல்ல, பிற சமூகங்களைச் சேர்ந்த  மக்களையும் அணிதிரட்டி, அவர்களை தொழிலாளர்கள், விவசாயிகள் என வர்க்க ரீதியாக ஒன்றுதிரட்டி போராடுவதுதான் கம்யூனிசம். ஆர்எஸ்எஸ் ஆதரவு அவ தூறு பேர்வழி சவுக்கு சங்கருக்கு இது புரியாது.