states

img

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் சிபிஎம் 17 இடங்களில் போட்டி

ஜெய்ப்பூர், அக். 30 - ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது.  இந்நிலையில், இந்த தேர்த லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள மிறங்கும் 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை, ராஜஸ்தான் மாநிலச் செயலாளர் அம்ரா ராம் வெளியிட்டுள் ளார். ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருக்கும் பல்வான் பூனியா (பத்ரா) மற்றும் கிரிதர்லால் மஹியா (ஸ்ரீதுங்கர்கர்) ஆகிய இருவரும் மீண்டும் களமிறங்கும் நிலையில், கடந்த முறை பெரும் அளவு வாக்குகளைப் பெற்ற அம்ரா ராம் (தண்டா ராம்கர்), சியோபத் ராம் மேக்வால் (ராய்சிங்நகர்) மற்றும் பேமா ராம்(தோட்) ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் பட்டியல் விபரம் :  1. கோட் (தனி) - பேமா ராம், 2. தந்த ராம்கர் - அம்ரா  ராம், 3. லக்ஷ்மண்கர் - விஜேந்திர டாக்கா, 4. சிகார் - உஸ்மான் கான், 5. ஹுன்மன்கர் - ரகுவீர் வர்மா, 6. பத்ரா - பல்வான் பூனியா, 7. நோஹர் - மங்கேஜ், சௌத்ரிஷ்ரி (தனி) - ஷியோபத் ராம் மேக்வால், 9. அனுப்கர்  (தனி) - ஷோபா சிங் தில்லான், 10. துங்கர்பூர் (தனி)  - கவுதம் டாமோர், 11. தாராநகர் – நிர்மல் குமார் பிரஜாபத், 12. சர்தார் ஷஹர் - சகன்லால் சவுத்ரி,  13. சாதுல்பூர் - சுனில் பூனியா, 14. ஜாதுல் (தனி) - பிரேம் பார்கி, 15. லாட்னுன் - பகீரத் யாதவ், 16. நவான் - கனராம் பிஜரானியா, 17. துங்கர்கர் - கிர்தாரி லால் மஹியா.