states

பி.எம். கேர்ஸ் நிதியம் அரசுக்கு சொந்தமானதோ; சட்டத்தால் உருவாக்கப்பட்டதோ அல்ல!

புதுதில்லி, பிப். 1 - “பிஎம் கேர்ஸ் நிதியம் (PM CARES Fund) என்பது ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளை, இது மாநில, ஒன்றிய சட்டங்களால் உருவாக்கப்பட்டதல்ல; இந்திய அரசாங்கத்தாலும் கட்டுப்படு த்தப்படவில்லை” என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் நரேந்திர மோடி அரசு  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் 12-ஆவது பிரிவின் கீழ், பி.எம்.  கேர்ஸ் நிதியத்தை அரசுக் கட்டுப்பா ட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த  ஆண்டு, பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் நரேந்திர மோடி அரசு மேற்கண்டவாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாட்டில் பல்வேறு வகையான இடர்பாடுகள் ஏற்படும் போது, மக்க ளுக்கு உதவி செய்வதற்கு, பிரதமர் நிவாரண நிதியம் (Prime Minister’s Relidf Fund  - PMRF) என்ற அமைப்பு இருக்கிறது. நிறுவனங்கள், அமைப்புக் கள், தனி நபர்கள் இந்த அமைப்புக்கு வழங்கும் நன்கொடை, பிரதமர் அலு வலகம் மூலமாக பாதிக்கப்பட்டவர் களுக்கு சென்றடையும். இதற்கான வரவு - செலவுக் கணக்கு அரசால் பரா மரிக்கப்படும் என்பதுடன், மத்திய தலை மைக் கணக்கு அதிகாரியின் தணிக்கைக்கும் உட்படுத்தப்படும். இது தான் இவ்வளவு காலமும் இருந்த நடை முறை. 2019 டிசம்பர் 31 நிலவரப்படி பிரதமர் நிவாரண நிதியத்தில் ரூ. 3  ஆயிரத்து 800 கோடி அளவிற்கு உபரி நிதியும் இருந்தது. 

ஆனால், கொரோனா காலத்தில், பிரதமர் நரேந்திர மோடி திடீரென பிரதம ரின் அவசரகாலச் சூழ்நிலை குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம்  (The Prime Minister’s Citizen Assistance and Relidf in Emergency SituationsFund- PM CARES FUND) என்ற நிதியமைப்பை, 2020 மார்ச் 28  அன்று அவசர அவசரமாக உரு வாக்கிக் கொண்டார். இந்த அறக் கட்டளைக்குத் தன்னைத் தலைவராக வும், மூத்த அமைச்சர்களை உறுப் பினர்களாகவும் நியமித்துக்கொண் டார். மேலும் இந்த அறக்கட்டளையின் கீழ் பல ஆயிரம் கோடிகளை நன்கொ டையாக பெற்றார். ஆனால், இதற் கான வரவு - செலவு குறித்து வெளிப் படையாக தெரிவிக்கப்படவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேள்வி எழுப்பியபோது, “தகவலுரி மைச் சட்டம், 2005 பிரிவு 2 எச்-இன் படி, பொது அதிகாரத்தின் கீழ் ‘பிஎம் கேர்ஸ் நிதியம்’ வராது. வேண்டுமா னால் இது தொடர்பான விவரங்களை  pmcares.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என பதிலளிக்கப்பட்டது. 

மேலும், பிஎம் கேர்ஸை, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (CAG) தணிக்கைக்கும் உட்படுத்த முடியாது என்றும் கூறப் பட்டது. இப்போது வரை பிஎம் கேர்ஸ்  நிதியம் மர்மமாகவே இருந்துவருகிறது. இந்நிலையில், இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் பிரிவு 12-இன் படி,  பி.எம் கேர்ஸ் நிதியை அரசுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என சம்யாக் காங்க்வால் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதி யமைச்சர் ஆகியோரை நிர்வாகி களாகக் கொண்டுள்ள அறக்கட்டளை யின் மீது அரசுக்குக் கட்டுப்பாடு இல்லை எனக் கூறியிருப்பது நாட்டு  மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கி யுள்ளது. எனவே, பிஎம் கேர்ஸ் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ‘பிஎம் கேர்ஸ்’ என்பது அரசுக்கு சொந்தமான நிதி அல்ல என்று வெளிப்படையாக அறி விக்க வேண்டும்; நிதியத்தில் பிரதம ரின் பெயரை (“PM” என) பயன்படுத்து வதைத் தடுக்க வேண்டும்; அரசு முத்தி ரைகளும் விளம்பரங்களில் இடம் பெறக் கூடாது, இணையதளத்தில், கவர்மெண்ட் (‘gov’) என்ற டொமைன் பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்க  வேண்டும்; பிஎம் கேர்ஸ் நிதியானது பிரதமரின் அலுவலகத்தை அதன் அதி காரப்பூர்வ முகவரியாகப் பயன்படுத்து வதையும் தடுக்க வேண்டும்” என்று  மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜரானார். அவர், பி.எம் கேர்ஸ் நிதியம் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது அல்ல எனவும், தணிக் கைக்கு பதிலளிக்கும் பொதுப்பொறுப் பில் இருந்து அதனை நீக்க முடியாது எனவும் வாதிட்டார்.

இந்நிலையில்தான், நரேந்திர மோடி அரசு தற்போது இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளது.  அதில், “’பிஎம் கேர்ஸ்’ அறக்கட்ட ளையானது எந்தவொரு அரசாங்கம் அல்லது அரசாங்க அமைப்புக்களின் உடமையோ, அவற்றுக்கு கட்டுப்பட்ட தோ அல்ல. அமைப்பு நிர்வாகத்திற்காக மட்டுமே, பொதுப் பதவியில் இருப்ப வர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதியம் அல்லது அறக்கட்டளை உருவாக்கப்பட்டதும், அது தொடர் வதும், அறக்கட்டளையின் நிதிகள்  எந்தவொரு அரசாங்க திட்டங் களுக்கும் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல. இந்த அறக்கட்டளை அரசாங்க கொள்கைகளாலும் நிர்வகிக்கப்பட வில்லை. தனிநபர்கள் மற்றும் நிறு வனங்களின் தன்னார்வ நன்கொடை களை பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. மற்றபடி அரசாங்கத்தின் பட்ஜெட் ஆதாரங்களில் இருந்து வரும்  எந்தவொரு பங்களிப்பையும் அது ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் பிஎம் கேர்ஸ்,  நாடாளுமன்றச் சட்டம் அல்லது  அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட வில்லை என்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின் கீழ் பொது அதிகார வரம்பிற்குள் வராது. அறக் கட்டளையின் நிதிகள் எந்த அரசாங்கத் தன்மையையும் கொண்டிருக்க வில்லை என்பதால், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட பங் களிப்புகள் மற்ற தனியார் அறக்கட்ட ளைகளைப் போல வருமான வரிச்சட்ட த்தின் கீழ் விலக்கு பெறுகின்றன. பிரதம ரின் தேசிய நிவாரண நிதிக்காக ‘gov.in’ என்ற தேசிய சின்னம் மற்றும் டொமைன் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது பிஎம் கேர்ஸ் நிதிக்கா கவும் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.