சென்னை,ஜூன் 20- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை (ஜூன் 21) அதிகாலை இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட மா.சுப்ரமணியன் பின்னர் செய்தியா ளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய ரத்த நாளங்கள் 3 அடைப்புகள் இருந்துள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதை அடுத்தே அவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிலப்ட் தின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காக அளிக்கப்பட்ட மருந்து நிறுத் தப்பட்டு 5, 6 நாட்கள் கழித்துத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், ரத்தக் கசிவு ஏற்பட்டு விடும். எனவே, அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தள்ளி வைத்தார்கள். அந்த ரத்தக் கசிவு பிரச்சனை இனி வராது என்பது உறுதி செய்யப்பட்டுள் ளதால், செந்தில் பாலாஜிக்கு புதன் கிழமை(ஜூன் 21) அதிகாலை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்ட மிட்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு அளிக்கப் படும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக அரசு சார்பில் தனிக் குழு ஏதும் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில், காவிரி மருத்துவ மனையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அறுவை சிகிச்சை பெறு வதற்கு ஏற்ற உடல் தகுதியினை செந்தில் பாலாஜி பெற்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார் கள். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் ஆபத்தான அடைப்பு இருப்பது தெரி யாமலேயே அவர் இருந்திருக்கிறார். செந்தில் பாலாஜியின் குடும்ப மருத்து வர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க செகண்ட் ஒப்பீனியன் வழங்க அப்ப ல்லோ மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் செங்கோட்டுவேல் வந்து பார்வையிட்டு உறுதி செய்திருக்கிறார். அதன்பிறகு அமலாக்கத்துறை, இஎஸ்ஐ மருத்துவர் களைக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்களும், ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது உண்மை என்பதையும், அறுவை சிகிச்சை தேவை என்பதையும் உறுதி ப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.