states

img

பெண்கள் கல்வி மீதான தடையை நீக்கவேண்டும்

தலிபான்களுக்கு மலாலா வேண்டுகோள்

காபூல், அக்.19- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பெண்கள் கல்வி மீதான  தடையை நீக்க வேண்டுமென தலிபான் களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் கல்விக்காக பாடுபட்ட  மலாலா என்ற பாகிஸ்தான் சிறுமி  கடந்த 2012-ஆம்  ஆண்டு பாகிஸ்தானில் சுவாத் பள்ளத்  தாக்கில் பள்ளி விட்டு வேனில் சென்று கொண்டிருந்தபோது, தலிபான் தீவிரவாதி களால் கண்மூடித்தனமாக சுடப்பட்டார். இறந்து விட்டார் என்று நினைத்த போது, அவ்வளவு சீக்கிரமாக இந்த உயிர் போகாது என்று மலாலா மீண்டு எழுந்தார். தீவிரவாதிகள் சுட்டதில் அவரின் தலை மற்றும் முகத்தில் குண்டுகள் பாய்ந்தன. பின்பு, அவருக்கு கிரேட் பிரிட்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மனம் தளராக மலாலா ஒரே வாரத்தில் தனது பணியை மீண்டும் துவக்கினார்.  மலாலா, உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா, பெண்கள் கல்விக்காக அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார்.

2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவை தேடி வந்தது. நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பெண்கள் கல்வி மீதான தடையை நீக்க வேண்டுமென தலிபான்களுக்கு மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்கள் பள்ளிக்குச் செல்வதை மதம் தடுக்காது ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாதங்களுக்கு மேலாகி  விட்டது. சிறுவர்களை மட்டும் கல்வி கற்க பள்ளிக்கு வருமாறு உத்தரவிட்டுள்ள தலிபான்கள் முஸ்லிம் சட்டத்தில் கூறப் பட்டுள்ளபடி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தபின் அவர்களை அனுமதிப்பதாகக் கூறி காலம் கடத்திவருகிறது. இதற்கிடையில் மலாலா உள்ளிட்ட பெண் உரிமை ஆர்வலர்கள் தலிபான் அதிகாரி களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ பெண்கள் கல்வி மீதான உண்மையான தடையை திரும்பப் பெறுங்கள். பெண்கள் கல்விகற்க ஏதுவாக மேல்நிலைப் பள்ளிகளை உடனடி யாகத் திறக்கவேண்டுமென” வலியுறுத்தி யுள்ளனர். இந்தக் கடிதத்தில் 64 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள னர். பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தடுப்பதை, மதம் நியாயப்படுத்தாது என்பதை தலிபான்களுக்கு தெளிவுபடுத்துமாறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை மலாலா கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய அமெரிக்க ஆதரவு ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்தவரை உள்ளடக்கிய எழுத்தாளர்கள், “பெண்களின் கல்வியைத் தடை செய்யும் ஒரே நாடு ஆப்கானிஸ்தான்” எனக் கூறியுள்ளனர்.  ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை ஜி- 20 உலகத் தலைவர்கள் ஆப்கானி யக் குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்திற்கு அவசர நிதி வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ஜி-20 நாடு களின் பட்டியலில் அர்ஜெண்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சி கோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப் பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன.

;