states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி : கார்கே ராஜினாமா!

புதுதில்லி, அக்.1 காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜி னாமா செய்துள்ளார். ஒரு தலைவர், ஒரு பதவி என்ற தீர்மா னத்தின்படி, எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜி னாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.  இதையடுத்து,  காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ப.சிதம்பரம், திக்விஜய் சிங்  ஆகியோரில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெ டுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி-தான் ஏற்கெனவே கிடைத்து விட்டதே!

நாட்டில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை யன்று துவங்கி வைத்துள்ள நிலையில், 5ஜி-தான் ஏற்கெனவே நாட்டு மக்களுக்கு கிடைத்து விட்டதே.. தற்போது புதிதாக என்ன  5ஜி...? என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கேட்டுள்ளார்.  அதாவது, பாஜக ஆட்சியினால் மக்களுக்கு ஏற்கெனவே ஏழ்மை  (Garipi), ஊழல் (Ghotala), மோசடி (Ghapla), கலப்படம் (Ghalmel),  ஒழுக்கமற்ற செயல் (Gorakantantha) ஆகிய 5ஜி (G என்ற வார்த்தையில் தொடங்கும் மேற்கண்ட 5 வார்த்தைகள்) கிடைத்து விட்டதாக அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

சசி தரூர் - கார்கே நேரடி போட்டி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சோனியா  காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடாத நிலையில், மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் திரிபாதியின் மனு உரிய முறை யில் பூர்த்தி செய்யாததால், சனிக்கிழமையன்று தள்ளுபடி யானது. இதையடுத்து, மல்லிகார்ஜூன கார்கே - சசிதரூர் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

பாகிஸ்தானின் டுவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்

புதுதில்லி, அக்.1- பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்  செய்யப்பட்டுள்ளது.  அந்த பக்கத்துக்கு சென்றால் “சட்ட ரீதியான கோரிக்கையை ஏற்று டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும், இந்திய அரசு அதிகாரி களின் கோரிக்கையை ஏற்று பாகிஸ் தான் டுவிட்டர் பக்கம் முடக்கம் செய் யப்பட்டதா, அல்லது வேறு யாரேனும் காரணமா? என்று தெரியவில்லை.  இதுதொடர்பாக இந்திய - பாகிஸ் தான் அதிகாரிகள் தரப்பிலும் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்குப்பதிவு

சென்னை, அக்.1- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.  வரு கிற 4 ஆம் தேதி வரை மனுவை திரும்பப்  பெற அவகாசம் இருக்கிறது. மூவரும் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும்.  இதற்கான வாக்குப்பதிவு அக்.17 அன்று நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பு 5 ஆம் தேதி வெளியாகும். வாக்குப்பதிவு நடைபெற்றால் தமிழகத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும். தமிழகத்தில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள்  மாநிலத் தலைவர்கள் உள்பட 710 பேருக்கு வாக்குரிமை உள்ளது. அவர்கள்  அனைவரும் வாக்களிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

“தோனியை போல் என்னை வைத்து ஃபினிஷிங்...” முதல்வர் 

சென்னை, அக்.1- ட்விட்டர் ஸ்பேஸில் திமுக தலை வர்கள் உரையாற்றி வந்தனர். அதன் கடைசி நாளில் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்க மும் கூட. ஒருகாலத்தில் நமது கொள்கையை பரப்ப நடாக மேடை, பத்திரிகை, திரையுலகம் ஆகியவற்றை பயன்படுத்தினோம்.  கவிதையாக, கதையாக நாவலாக பரப்பினோம். அந்த வகையில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப  நாமும் நம்மை இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். எதன் மூலமாக  மக்களுடன் உரையாட முடியுமோ அதை  எல்லாம் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமது சாதனைகளை மக்களி டம் கொண்டு செல்லும் தளமாக நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் அறிவார்ந்த புத்தகங்களை படியுங்கள். நமது சாதனைகளை எந்த அளவு பொது வெளியில் பரப்புகிறீர்களோ அந்த அளவு  நன்மைகள் நிகழும்.  கடந்த 29 நாட்கள் பேச வைத்து விட்டு கடைசியாக தற்போது என்னை  பேச வைத்திருக்கிறார்கள். தோனியை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு என்னை பினிஷிங் இன்னிங்ஸ்  ஆட சொல்லியிருக்கிறார்” என்றார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

சென்னை,அக்.1- ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்றாலும், அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, “ நீதிமன்றத்தின் பார்வையில் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. எந்த வகையில் அனுமதி அளிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஆர்எஸ்எஸ் வன்முறை பின்புலம் கொண்ட ஒரு அமைப்பு.  அந்த வன்முறை காரணமாகத்தான் காந்தி கொல்லப் பட்டார்; பாபர் மசூதி இடிக்கப்பட்டது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பின்பலம் கொண்ட ஒரு அமைப்பு ஊர்வலம் நடத்த நாம் அனுமதிக்கக் கூடாது” என்றார். பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என்று அன்று உறுதி அளித்தார்கள். ஆனால், கலாச்சாரத்துக்கு எதிராக ஒரு  இறை வழிபாட்டு தளத்தினை நாசம் செய்தார்கள். நீதிமன்றத் தின் ஒப்புதல் பெறப்பட்டாலும், சட்ட ஒழுங்கு என்பது மாநிலத்தின் கடமை. எனவே, மீண்டும் தமிழக அரசு மேல்  முறையீடு செய்ய வேண்டும். இதுபோன்ற அமைப்பை நடமாட வைப்பது நல்லதல்ல என்றும் கூறினார்.



 

;