கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், வெள்ளி யன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்த னம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியுடன், மறைந்த சரத் யாதவின் லோக்தந்திரிக் ஜனதா தளம் (எல்ஜேடி) தனது கட்சியை இணைத்தது.
கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் வியாழனன்று சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்து 66,408 புள்ளிகளான நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் குறைந்து 19,794 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
உலகின் பிரபல அழகு சாதன பொருட்கள் தயா ரிப்பு நிறுவனமான ஜப்பான் நாட்டின் ஷிஷீடோ (Shiseido) என்ற நிறுவனத்தின் இந்திய தூதராக பிரபல தென்னிந்திய நடிகையான தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறு வனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பதால் மிசோரம் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை யை வேறு தேதிக்கு மாற்ற ஆளும் எம்என்எப், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத் துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 90 சதவீதத்திற்கும் மேல் கிறிஸ்தவ மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம்.
சிபிஐ கூடுதல் இயக்குநர் டி.சி. ஜெயினை, சிபிஐயின் சிறப்பு இயக்குநராக நியமனம் செய்ய ஒன்றிய அமைச்சரவையின் நியம னக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கப்போவதாக கூறி மதச்சார்பற்ற ஜனதாதளம் பாஜக கூட்டணியில் இணைந்துள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இணையவுள்ளதாக வும், பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் காங்கி ரஸின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.