states

தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவைக் கைவிடுக!

சட்டமன்றத்தில் சிபிஎம் எதிர்ப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.12) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவை” அறிமுகம் செய்தார்.  ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத் தொகுப்புகளை இயற்ற முனைந்து வருகிறது. ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்புகள் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை முதலாளிகள் கோரிக்கைகள் அடிப்படையில்  அரசு  அறிமுகம் செய்த சட்டத் திருத்தத்தை ஆரம்ப நிலையிலேயே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாக, உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னதுரை ஆகியோர் தெரிவித்தனர். மேலும், இச்சட்டத் திருத்தம் குறித்து மீண்டும் மறு பரிசீலனை செய்து, ஆலோசனை குழுவுக்கு அனுப்பி வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளோடு கலந்தாலோசிக்க வேண்டும் என்று அமைச்சரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி, கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் கடிதம் கொடுத்தனர்.

தமிழ்நாடு அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்

சென்னை,ஏப்.13- தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகின்ற தொழிற் சாலைகள் சட்டத்திருத்த மசோதா  சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள் ளது. மசோதாவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர்   ஜி.சுகுமாறன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:  தொழிற்சாலைகள் சட்டம் 1948க்கு  திருத்தங்களைச் செய்கிற சட்டமுன் வடிவை தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதிர்ச்சி யளிக்கிற அரசின் இந்த முடிவு கண்ட னத்திற்குரியது. தொழிற்சாலைகள் சட்டம் கொண்டு வரப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் வேலை நேரம்  தொடர்பான ஷரத்துக்களை எந்த  அரசும் திருத்தியதில்லை. ஒன்றிய  அரசின் அடியொட்டியும், முதலாளிக ளின் கோரிக்கைப் படியும் இந்த திருத்தங்கள் வருகின்றன.

ஒன்றிய அரசு தற்போது நிறைவேற்றி யுள்ள புதிய சட்ட தொகுப்புகளில் செய்துள்ள மோசமான திருத்தங்களை அப்படியே ஏற்று பிரதிபலிப்பது தமிழக அரசிற்கு அழகல்ல.ஒன்றிய அரசின் திட்டங்கள் இன்னும் அமலாகவில்லை அதற்குள் இங்கே தாவிக்குதித்து திருத்தங் கள் செய்வது கவலையளிக்கிறது. தொழிற்சாலைகள் சட்டத்தின்  51,52,54, 55,56,59 ஆகிய ஷரத்துக்கள் வேலை நேரம், கூடுதல் வேலை நேரம்,  கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம்,  கூடுதல் வேலைக்கான ஈடுகட்டும் விடு முறை, பணியின்போது விடவேண்டிய ஓய்வு நேரம் போன்ற அடிப்படையான உரிமைகள் சம்மந்தப்பட்டவை. வேலை நேரத்தோடு தொடர்புள்ள  இந்த ஷரத்துக்களில் இருந்து தொழிற்சாலை அல்லது  தொழிற்சாலை களின் குழு அல்லது குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்க லாம் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேலை நேரத்தையே உயர்த்த வேண்டுமென்றும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்க அனுமதிக்க வேண்டுமென்றும் முதலாளிகளும், முதலாளிகளின் சங்கங்களும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டு வருகின்றன. இப்போது வேலை நேர உரிமை விஷயத்தையே நீர்த்துப் போகச் செய்யவும், நெகிழ்வானதாக மாற்றவும், தமிழக அரசு முதலாளிகளோடு உடன்பட்டிருக்கிறது. இது தொழிலாளர்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கையாகும். வேலை  நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது தொழிற்சங்க அமைப்புகளின் (எல்.பி.எப் உட்பட) கோரிக்கையாகும். எனவே, தொழிலாளர்களின் தேவைகளுக்கு எதிரான திசையில் தமிழ்நாடு அரசு பயணிப்பது வேதனைக்குரியது.

முதலாளிகளின் கோரிக்கையை அப்படியே ஏற்றிருக்கிற மாநில அரசு தொழிற்சங்கங்களோடு எந்த ஆலோ சனையும் செய்யவில்லை.  தொழிலா ளர்களுக்கு இந்த அரசில் மதிப்பு அவ்வளவுதானா? மாநில தொழிலாளர் ஆலோசனை  வாரியம்   என்ற முத்தரப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  அரசுத் தரப்பு, தொழிலாளர் தரப்பு, முத லாளிகள் தரப்பு என முத்தரப்பும் இருக்கிற உயர்மட்டக்குழுவாகும்.  சட்டத் திருத்தங்கள் தொடர்பான விஷ யங்கள் குறித்து அரசிற்கு ஆலோச னை வழங்குவதுதான் இந்த வாரி யத்தின் நோக்கம். இந்த ஆலோச னை வாரியத்திலும் இது விவாதிக்கப்பட வில்லை.  முத்தரப்புக் குழுவும் பெயரள விற்குத்தானா? எந்த வகையிலும் ஏற்க இயலாத, தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகிற இந்த சட்டத்திருத்த முன்வடிவைக் கைவிடுமாறு வலி யுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசின் இந்த தொழிற்சாலை கள் சட்டத்திருத்த முன்வடிவை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களிலும், அனைத்து ஆலை மட்டங்களிலும் கண்டனம் மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டங்களை உடனடியாக நடத்துமாறு சிஐடியு தமிழ்மாநிலக்குழு தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்கிறது.