states

img

சட்டத்துக்குட்பட்டு செயல்படுவேன்

ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி 

ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி  சென்னை,செப்.18- சட்டத்துக்கு உட்பட்டு செயல்படு வேன் என்று தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி கூறி யுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன் வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நிய மிக்கப்பட்டார். இதையடுத்து நாகா லாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நிய மித்தார். இதைத் தொடர்ந்து, புதிய ஆளு நர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சனிக் கிழமையன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவ ருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத் தார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு. அப்பாவு, துணை தலைவர் கு. பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி, நாடாளு மன்ற, சட்டப்பேரவை உறுப்பி னர்கள், ஒன்றிய அரசின் இணைய மைச்சர் எல்.முருகன், உயர்நீதி மன்ற நீதிபதிகள், அரசு உயர் அதி காரிகள், அரசியல் கட்சித் தலைவர் கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குப் புத்த கங்களை வழங்கி வாழ்த்து தெரி வித்தார். அதேபோன்று, அமைச்சர் களும் புத்தகங்கள், சால்வைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.என். ரவி ஆளுநர் மாளி கையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது, “தமிழ்நாட்டின் கலாச்சாரம் உலகில் மிகவும் பழமையான கலாச்சாரமா கும். இங்கு ஆளுநராக செயல்படு வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

பழமை வாய்ந்த தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன் என்றும் ஆளுநர் கூறினார். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்தும் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில ளிக்கையில், “தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல மைப்பு சட்டத்தின்படி பாடுபடுவேன். தமிழக அரசுக்கு என் முழு ஒத்து ழைப்பு தருவேன். ஒன்றிய, மாநில  அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவேன்”எனவும் தெரி வித்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளு நர் பதவி என்பது விதி விலக்குக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படு வேன். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப் படுத்தி உள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை என்றும் ஒன்றிய அரசிடமி ருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை பெற்று தருவேன் என்றும் ஆளுநர் ரவி கூறி னார்.
 

;