சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறு வனத்தில் பணியில் சேர கல்வித்தகுதியாக இந்தி,சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், பகுதிநேர கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஆளெடுப்பது தொடர்பான விளம்பரம் ஒன்றை ஜுன் 21 அன்று நாளேடுகளில் வெளி யிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர்வதற்கான கல்வித்தகுதி பற்றிய குறிப்பில் தமிழ், ஆங்கி லம், இந்தி, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு தமுஎகச வன்மை யான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் இயங்கும் இந்த நிறு வனத்தில் பயிற்றுவிக்க தமிழும் ஆங்கிலமும் படித்தவர்களே போதுமானதாயிருக்கும் நிலையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் முதுநிலை/ எம்.பில்., படித்தவர்களை பணிய மர்த்தும் இம்முயற்சி தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரானது. எனவே தற்போதைய விளம்பர அறிவிக்கையை வெளியிட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதனை திரும் பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.