states

குரூப் -1 தேர்வில் மதிப்பிடும் பணி திறமையான மதிப்பீட்டாளர்களிடம் மட்டுமே வழங்குவதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்யும்

மதுரை, நவ.15-  குரூப் 1 தேர்வில் தமிழில் எழு தப்பட்ட முதன்மைத் தேர்வுத் தாள்  களை மதிப்பிடும் பணியை திறமை யான மதிப்பீட்டாளர்களுக்கு மட் டுமே வழங்குவதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்யும் என நம்புகிறேன் என்று நீதிபதி தெரிவித்தார். இதுகுறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.சக்தி ராவ் என்பவர் தாக்கல் செய்த மனு வில், குரூப் 1 தேர்வின் முதன்மை  தேர்வை தமிழ் மொழியில் எழுதும் தேர்வு விடைத்தாள்களை, 1 ஆம்  வகுப்பு முதல் பட்டம் வரை தமிழ்  வழிக் கல்வியை தமிழ் வழியில் படித்த நபர்கள் தான் மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்பு செவ் வாயன்று நடைபெற்றது.  பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்த ரவில், தமிழ் வழித் தேர்வர்கள் எழு தும் தாள்களை 1 ஆம் வகுப்பு முதல் பட்டம் வரை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மனுதாரர்  கூறியுள்ளார். இந்த விஷயத்தில் மனுதாரருக்கு உரிய நிவாரணம்  வழங்க இயலாது. டிஎன்பிஎஸ்சி ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனமாக இருப்பதால், பணியை வழங்கு வதற்கு முன், எந்தவொரு மதிப்  பீட்டாளரின் திறனைப் பற்றியும் நிச்சயமாகத் திருப்தியடைந்தி ருக்கும். 1 ஆம் வகுப்பு முதல் பட்டம் வரை தமிழ் வழியில் படித்த ஒரு வர் மட்டுமே தமிழில் விடைத்தாள்  களை மதிப்பிடும் தகுதி உடைய வராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கில மீடியத்  தில் படித்த ஒருவர் தமிழராக இருந்  தாலும் சரி, சரியாக மதிப்பிடும் திறன் பெற்றிருக்கலாம் .இவை அனைத்தும் மதிப்பீட்டாளர் சார்ந்தவை. டிஎன்பிஎஸ்சி மனு தாரரின் கோரிக்கையை கணக் கில் எடுத்துக்கொண்டு தமிழில் எழு தப்பட்ட முதன்மைத் தேர்வுத் தாள்  களை மதிப்பிடும் பணியை திற மையான மதிப்பீட்டாளர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார். பின்னர் அறிவுறுத்தலுடன் நீதி பதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.