states

ஈட்டிய விடுப்பிற்கு ஊதியம் பெறும் உரிமை

சென்னை,அக்.18- ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு  செய்து ஊதியம் பெறும் உரி மையை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநி லத்தலைவர் எஸ்.பக்தவச்சலம் தலைமையில் அண்மையில் (ஞாயி றன்று) நாமக்கல்லில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,: பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மற்றும் அதன் தொடர்புடையப் பணிகளான தேர்வுப் பணிகள், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இவற்றைத் தவிர வேறு எந்த பணி யிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது, ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும், மேல்நிலைப்பள்ளிக் கும் குறைந்த பட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களுக்கு (தமிழாசிரியர் உட்பட) பணியிடங்களை வழங்க  வேண்டும், 1500 ஆசிரியர்கள்,  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி  பெறாமல், அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகளில் கடந்த 10 ஆண்டு களாக பணியாற்றி வருகின்ற னர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்ததைப் போன்று இவர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்களித்து பணிவரன்முறை செய்திட வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  வலியுறுத்தப்பட்டது.  பொதுக்குழுவிற்கு ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவர் அ.மாயவன் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்டத்தலைவர்  கே.எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற் றார். எஸ்.சேதுசெல்வம்  செயல்  அறிக்கையையும் மாநிலப்பொரு ளாளர் சி.ஜெயக்குமார், வரவு, செலவு அறிக்கையையும் சமர்பித்த னர். நிறைவாக மகளிர் அணிச் செயலாளர் கே.வாசுகி நன்றி கூறினார்.