states

மே மாதத்தில் மட்டும் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.1.80 லட்சம் கோடி!

புதுதில்லி, ஜூன் 4- 2022 மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி  வர்த்தகம், கடந்த 15 மாதங்களில் இல்  லாத அளவிற்கு மெதுவான வளர்ச்சி யைப்ப் பதிவு செய்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறையும் ரூ. 1 லட்  சத்து 80 ஆயிரம் கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில், ஏற்றுமதி 15.46 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 2 லட்  சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் (3,729  கோடி டாலர்)அளவுக்கு வர்த்தகம் நடை பெற்றுள்ளது. கடந்த 15 மாதங்களில் இது மிக மெதுவான வளர்ச்சியாகும். இதற்கு முன்பு, 2021 பிப்ரவரியில் ஏற்றுமதி வளர்ச்சி 0.67 சதவிகிதம் என்ற  மிகக் குறைந்த அளவில் பதிவாகியிருந்  தது. அதற்கு அடுத்தபடியாக 15 மாதங்க ளுக்குப் பிறகு, இப்போதுதான் ஏற்று மதி வர்த்தகம் குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேநேரம், 2022 மே மாதத்தில் இறக்குமதி வர்த்தகம் 56.14 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 4 லட்சத்து 67 ஆயிரம்  கோடி ரூபாய் (6,062 கோடி டாலர்) அள விற்கு உள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக (2,333 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.  ஏற்றுமதி வர்த்தகத்திற்கும், இறக்கு மதி வர்த்தகத்திற்கும் இடையிலான வித்தியாசமே வர்த்தகப் பற்றாக்குறை என்று குறிப்பிடப்பிடுகிறது. 2020-2021 நிதியாண்டின் மே மாத வா்த்தக பற்றாக்குறை 653 கோடி டாலர் அளவிலேயே இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த மே மாதத்தில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 91.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தங்  கத்தின் இறக்குமதியும், மே மாதத்தில் அதிகரித்து, 44 ஆயிரத்து 814 கோடி  ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே இறக்குமதி அதிகரிப்புக்கும், வர்த்தகப் பற்றாக்குறை உயர்வுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.