சென்னை, பிப்.18- ராஜஸ்தானில் இஸ்லாமியர் களை எரித்துக்கொன்ற இந்துத் துவா சக்திகள் மீது ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து சிறுபான்மை மக் கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ராஜஸ்தான் மாநிலம் காட்மீகி மாவட்டத்தைச் சார்ந்த ஜூனைத், நசீர் ஆகிய இஸ்லாமியர்கள், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் பஜ்ரங் தள் அமைப்பி னரால் ஹரியானா- ராஜஸ்தான் மாநில எல்லையில் காரில் வைத்து எரித்துக்கொலை செய்யப்பட்டுள் ளனர். இந்த படுகொலையை தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்தப் படுகொலைக்கு காரணமான வர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. வட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை மக்களான முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருவது அன்றாட நிகழ்வாக மாறி வருகிறது. ஒன்றிய, மாநில ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு இந்த படுகொலைகள் பரவலாக நடந்து வருவது கண்டிக்கத்தக்கது. ஹரியானா- ராஜஸ்தான் எல் லையில் கொடுமையாக படு கொலை செய்யப்பட்ட போதும் ஹரி யானா மாநிலத்தின் ஆட்சிப் பொறுப் பில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இந்த கொடூரத்தை ஒரு கொலை வழக்காக கூட பதிவு செய்யவில்லை. இந்த படுகொலைக்கு காரணமான கும்பல் அடையாளம் காணப்பட்டும் பெயரளவிற்கு ஒரு வர் மட்டுமே கைது செய்யப்பட்டு பிரதான குற்றவாளிகளை பாது காக்கிற வேலையை பா.ஜ.க அரசு செய்து வருகிறது. கண்டனக்குரல் எழுப்புக! இந்த படுகொலைக்கு காரண மான குற்றவாளிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க ஒன்றிய -மாநில அரசுகள் முன்வர வேண்டும் . இந்தி யாவின் மதச்சார்பின்மைக்கு, மக் கள் ஒற்றுமைக்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்திற்கு எதி ராக செயல்படும் இந்துத்துவா சக்தி களை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்ப அனைத்துப்பகுதி மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.