வேலூர், ஜன.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மூத்தத் தலைவரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.சாவித்திரி ஜன.16 அன்று காலமானார். சத்துவாச்சாரியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்ததோழர் ஆர்.சாவித்திரி யின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங், முன்னாள் மாநிலக் குழு ப.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ்,போளூர் வட்டார செயலாளர் ரவிதாசன், மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பேபி ஆகியோர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட அமைப் பாளர் என்.காசிநாதன், வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராய ணன், எம்.பி.ராமச்சந்திரன், ப.சக்தி வேல், கே.சாமிநாதன், பி.காத்தவ ராயன், கே.ஜெ. சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், கே.பாண்டுரங்கன், பி.குணசேகரன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜி.லதா, அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எஸ்எஸ் ஓய்வூதியர் சங்க மாநில உதவி பொதுச் செயலாளர் ஏ.கதிர்அகமது, மாநில துணைத் தலை வர் சி.சுப்பிரமணியம், செயல் தலைவர் ஜி.நரசிம்மன். அகில இந்திய அஞ்சல் ஊழியர் தபால் மற்றும் எம்டிஎஸ் உதவி பொதுச் செயலாளர் ஏ.பெருமாள், கோட்டத் தலைவர் திருமகன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, செய லாளர் எஸ்.பரசுராமன், தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செ.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
82 கொடியுடன் ஊர்வலம்
பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்ட த்தில் தலைவர்கள் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, ஆம்பூலன்ஸ் வாகனத்தில் ஏற்ற ப்பட்ட அவரது உடல், 82 செங்கொடி களுடன் ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
மாதர் சங்கம் இரங்கல்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் ஆர்.சாவித்திரி மறைவுக்கு மாநிலக் குழு சார்பில் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநில பொதுச் செய லாளர் ஏ.ராதிகா இரங்கல் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், மாதர் சங்கத்தின் முன்னணி தலைவர், வேலூர் மாவட்டத் தலைவர், செயலாளர், மாநில நிர்வாகி யாகவும் பணியாற்றினார். மாதர் சங்க வளர்ச்சிக்கும், இடது சாரி இயக்கங் களின் வளர்ச்சிக்கு தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர். எடுத்த முடிவை அமல்படுத்து வதில் உறுதி, இயக்கப் பணிகளில் சமரச மற்ற போராட்டத்திற்கு திட்டமிடல், இரவு பகல் பாராமல் இயக்கப் பணி களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது, எளிமை எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம், இப்படி ஏராளமான நல்ல பண்புகளை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அஞ்சலக துறையில் பணிபுரிந்த சகோதரி சாவித்திரி, அரசியல் வாழ்க்கைக்கு தனது பணி இடை யூறாக இருக்கும் என கருதி தனது பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்து முழு நேர இயக்கப் பணிகளில் தன்னை ஈடு படுத்திக் கொண்ட மகத்துவமிக்க தலை வர். மாதர் சங்கத்தை தோற்றுவித்த தலைவர்களான பாப்பம்மாள், கே. பி. ஜானகி அம்மாள் அவர்களோடு இணைந்து பணியாற்றிய பெருமைக் குரியவர். தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் அவரது லட்சியத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.