states

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2 இல் தொடக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை, மே 5- தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல் லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெள்ளியன்று (மே 5) வெளி யானது. அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முத லாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜூன் 4ஆம் தேதி  வரை இணைய தளம் மூலமாக  விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியிலுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி  வரும் கல்வி ஆண்டிற்கான பொறி யியல் படிப்பு கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை வெள்ளியன்று (மே 5) தொடங்கி வைத்தார். மேலும் கலந்தாய்வு அட்டவணையையும் அவர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணா பல் கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஜூன்  மாதம் 6 ஆம் தேதி வரை நடை பெறும். அதனை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்”என்றார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும்.  ரேண்டம் எண் ஜூன் 7ஆல் வெளி யாகும் நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு  ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட்  7ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. கலந்தாய்வு விவரங்கள்,  வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.