states

வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்

புதுதில்லி, ஆக.7- நிதி ஆயோக் ஏழாவது கூட்டத்தில் வருவாய் பற்றாக்குறையால் மாநிலங் கள்  தவிக்கின்றன. வரிப் பங்கீட்டில் மாநிலத்திற்கான பங்கை அதிகரிக்க வேண்டுமென பல மாநில முதல்வர் கள் வலியுறுத்தினர். நிதி ஆயோக்கின் ஏழாவது கூட்டம் தில்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாச்சார மையத்தில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். 2019-ஆம் ஆண்டிற்குப் பின் நேரடியாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பேசுகையில், “சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு பிரச்சனையில், புதிய வரிகளால் மாநிலம் வருவாய் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. எனவே 2022 ஜூன் மாதத்திற்கு பிறகு பிறகு மாநிலத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வலியுறுத்தினார்.  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகையில், நிதி ஆயோக் “ஒரு குறைதீர் மையம்” என்ற முறையில் மாநிலத்தின் சுமையில் ஒரு குறிப்பிட்ட பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங் களைச் செயல்படுத்துவதில் மாநிலங் களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் என்றார். நிலக்கரி உள்ளிட்ட முக்கிய கனி மங்களுக்கான ராயல்டி விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும். நவம்பர்  2004-ஆம் ஆண்டு முதல் தேசிய  ஓய்வூதிய அமைப்பிற்கு (என்பிஎஸ்)  மாநில அரசு டெபாசிட் செய்த பணத்தை, அரசு ஊழியர்களின் நலனுக்காகத் திரும்பத் தரவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

மசூர் பருப்பு பற்றாக்குறை

கடந்த 5-6 ஆண்டுகளாக பருப்பு உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. சில பருப்பு வகைகளை ஏற்று மதி செய்கிறோம். சிலவற்றை இறக்கு மதி செய்கிறோம். மசூர் மற்றும் அர்ஹர்  பருப்புகளில் மட்டும் பற்றாக்குறை உள்ளது. மற்ற பருப்பு வகைகளில் நாம் தன்னிறைவுக்கு மிக அருகில் இருக்கிறோம் என்றார் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்.  இந்தக் கூட்டத்தில் மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் வேளாண்மையில் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

புறக்கணிப்பு ஏன்?  சந்திரசேகர ராவ்

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையேற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பல விஷயங்களில் நிதி ஆயோக் அமைப்பால்  எதுவும் செய்ய  முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்து க்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் ஏராள மாக இருக்கும். ஒன்றிய அரசு அளிக்கும் நிதி நேரடியாக மாநிலங்களுக்கு தரப் படுவதில்லை. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து என்  எதிர்ப்பை தெரிவிக்கிறேன்’’ என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் போதாது; பிரதமர் மோடி

நிதி ஆயோக் கூட்டத்தில  பேசிய  பிரதமர் மோடி, “ கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒவ் வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கியப் பங்காற்றின.  சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மேம்பட்டுள்ளது, வசூலை அதி கப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு கள் உள்ளது. ஜிஎஸ்டி வசூலை அதி கரிப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநி லங்களின் கூட்டு நடவடிக்கை தேவைப் படுகிறது. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாய்) உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி வசூல் முக்கியமானது. தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பேசிய பிரதமர், பலரது ஆலோ சனைகளுக்குப் பிறகு தான் தேசி யக் கல்விக் கொள்கை  உருவாக்கப் பட்டது. அதை செயல்படுத்துவதில் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டுமென்றார்.
 

;