சென்னை, அக். 31- அரசியலமைப்பு சட்டத்தை பாஜக சீர்குலைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் இந்திய செயலாளர் து.ராஜா குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களி டம் கூறியதாவது: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் மீண்டும் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த லுலா அதிபராக தேர்வு செய்ய ப்பட்டுள்ளார். சோசலிச கியூபாவின் வெற்றியை தொடர்ந்து, அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, பெரு, பொலிவியா உள்ளிட்ட பல நாடு களிலும் இடதுசாரி சார்பு ஆட்சி அமைந்து வருகிறது. இடது சாரி கொள்கைகள்தான் சிறந் தது என்பதை அந்த மக்கள் உணர்ந்து அதற்கேற்ப வாக்க ளிக்கிறார்கள். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட, பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவுதான் பாஜக. ஆர்.எஸ்.எஸ். சனாதனக் கொள்கைகளை நிலை நிறுத்த மக்கள் மீது மதவெறி அரசி யலை திணிக்கிறது. பாஜக அரசை ஆட்டுவிப்பது ஆர்எஸ்எஸ்அமைப்புதான் என் பதை மறந்து விடக்கூடாது.
நாடு மிகவும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பது நாட்டின் மரியாதையை குறை க்கும் என மோடி கூறினார். ஆனால் மோடி ஆட்சியில்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மோடி மாயாஜால வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு, மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். கூட்டாட்சி நெறிமுறைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என அரசியல மைப்புச் சட்டம் கூறுகிறது. இவை அனைத்தும் பாஜக ஆட்சியில் கேள்விக்குறியாகி வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை, மாநில உரிமைகளை பாது காக்க 2024ஆம் ஆண்டு நடை பெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். தமிழ கத்தில் எப்படி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து செயல்படுகிறமோ அதுபோல், பிற மாநிலங்களிலும் மதச் சார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள், சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். பல நாடுகளில் மத வெறி பாசிஸ்ட் ஆட்சிகள் முறிய டிக்கப்பட்டதுதான் வரலாறு. அது இந்தியாவிலும் நிகழும். இவ்வாறு அவர் கூறினார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு, தீவிரவாத செயலில் யார் ஈடுபட்டாலும் முறையாக விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது, ஆளும் அரசை இழிவுபடுத்தக் கூடாது என்றார். ஆளுநர் நடவடிக்கை கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜா, “ஆளுநர் நியமனங்கள் அரசியல் சார்ந்து அமைகின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் திட்ட மிட்டு ஆளுநர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்டமைப்புக்குள் நின்று ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் சனாதனக் கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படுவது சரியல்ல. இது அரசியல் சட்டத்திற்கு புறம்பா னது. ஆளுநர் தேவையா என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் தேவையில்லை என்பதை எங்கள் கட்சியும் ஆதரிக்கிறது” என்றார்.