states

பாலியல் குற்றவாளியை கைது செய்யாத பாஜக அரசு

சென்னை, மே 31- இந்திய மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி பிரிஜ் பூசன் சரண்  சிங்கை கைது செய்யக்கோரி ஒன்றிய  அரசு அலுவலங்களை முற்றுகையிட மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய  மாணவர் சங்கம் ஆகிய அமைப்பு களின் தமிழ்நாடு மாநிலக்குழுக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி யுமான பிரிஜ்  பூசன் சரண் சிங் மீது 17வயது சிறுமி  உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனை  கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். காவல்துறையோ ஒன்றிய விளை யாட்டு அமைச்சகமோ எந்த நடவடிக் கையும் எடுக்காத பின்னணியில் ஜனவரி மாதம் முதலே சாக்சி மாலிக்  உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனை களும், சக வீரர்களும் பலகட்ட போராட் டத்தை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் சாலை யில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆளும் பாஜக கட்சியின் எம்பி என்ற தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பிரிஜ் பூஷன் மீது எந்த சட்ட நடவடிக் கையும் எடுக்காதவகையில் தடுத்து வருகிறார். இதற்கிடையே அவரை கைது  செய்யாததை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீதே, கடந்த மே 28 அன்று புதிய  நாடாளுமன்ற திறப்பு விழா நிகழ்ந்த போது, காவல்துறை கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டு குண்டுகட்டாக போராட்டக்காரர் களை கைது செய்தது. முதல் தகவல் அறிக்கையில் பஜ்ரங்  புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோருடைய பெயரும் சேர்க்கப்பட்டு அவர்கள்மீது 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய  தண்டனைச் சட்டத்தின் ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவும் செய்துள் ளது.

அன்றைய தினம் ஜந்தர் மந்தரில் இருந்த 109 போராட்டக்காரர்கள் உட்பட தில்லி முழுவதும் 700 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.  மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனை கள் பல்வேறு இடங்களுக்கு பேருந்தில்  அடைத்து இழுத்துச் சென்றது மட்டுமின்றி போராட்டம் நடந்த இடத்தில் இருந்த வீராங்கனைகளின் உடைமைகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளது. நமது தேசத்திற்காக ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங் களை பெற்றுத்தந்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்த நமது தேசத்தின் மகள்கள், “சர்வதேச விளையாட்டு வீராங்கனைகளான எங்களின் மீதே பாலியல் குற்றத்தை, அதுவும் ஆளும் பாஜக கட்சியின் எம்பியே நிகழ்த்துகிறார் என்றால் அப்பாவி பெண்களின் நிலை என்ன?’’ என்று கேட்டே போராடி வருகிறார்கள். போராடுவதற்கான ஜனநாயக உரிமையை விடுதலை இந்தியாவில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பின்னணியில், போராடுபவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல  ஒன்றிய அரசு கட்டுபாட்டில் உள்ள  டெல்லி காவல்துறை கைது செய்திருப் பது, அதுவும் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் போதே இத்தகைய அடக்குமுறையை நிகழ்த்தி இருப்பது கொடூர பாசிச நடவடிக்கையாகும்.

நமது தேசத்தின் பிள்ளைகள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை  ஆற்றில் வீசி எறிய போகிறோம் என அறிவித்தும் ஒன்றிய அரசு சொரணையற்று இருக்கிறது. ஒருபோது இந்திய மக்கள் இத்தகைய அநீதியை ஏற்கமாட்டார்கள். எனவே தொடர் பாலியல் குற்றவாளி பரிஜ் பூசன் சரண் சிங்கை உடனே கைது செய்ய வேண்டும், மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என கோரி யும் டெல்லி காவல்துறையின் அத்து மீறலை கண்டித்தும், பாலியல் குற்ற வாளிக்கு துணை போகும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் வரும் ஜூன்  2ஆம்தேதி வெள்ளிக்கிழமை தமிழ் நாட்டிலுள்ள ஒன்றிய அரசு அலுவல கங்கள் முற்றுகை போராட்டம் நடத்த அறைகூவல் விடுகிறோம். மாதர்,  இளைஞர், மாணவர் என அனைத்து தரப்பினரையும், பொது மக்களையும் இப்போராட்டத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அந்த அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

;