சென்னை, மார்ச் 8- பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காக நீல கிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற கமலம் சின்னசாமிக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வை யார் விருது வழங்கி கவுரப் படுத்தினார். மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை எத்திராஜ் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார். விழாவில், அவ்வை யார் விருது நீலகிரி கமலம் சின்ன சாமிக்கும் வழங்கினார். பாராட்டு சான்று, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. சேலம் புதுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் சேலம் இளம்பிறை, அறிவியல் ஆர்வம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதானால் அதை சரி செய்ய புது கருவி கண்டுபிடித்தார். இவருக்கு பெண் குழந்தை விருது வழங்கப்பட்டது.
சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக கிடைத்த இந்த விருதை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதலமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்டார். நாகை மாவட்ட நிர்வாகத்திற்கு 2 ஆவது பரிசும், நாமக்கல் மாவட்டத் திற்கு 3 வது பரிசும் கிடைத்தது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் பெற்றுக்கொண்டனர். கமலம் சின்னசாமி எம்.காம். எப்.ஐ.ஏ. சி.ஏ படித்தவர். தமிழ் புலவ ரான இவர், மதுரை தமிழ் சங்க புலவர் பட்டங்களையும் பெற்றுள் ளார். இவரது கணவர் சின்னசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றி வந்தார். கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். மேலும் 7 ஆண்டுகள் ஆங்கில ஆசிரியரா கவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார். இதுதவிர சிறந்த ஓவியம் தீட்டுபவர், வண்ணக் கோலங்கள், உல்லன் வேலைப்பாடுகள், பனியன், மப்ளர், ஸ்கார், குரோஷா, பூ வேலை கள், தையல் கலையிலும் ஆர்வ முடையவர் கமலம் சின்னசாமி.