states

img

இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை, ஜூன் 11- 2022 - 2023 கல்வி ஆண்டில் பள்ளி  மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி யுடன் நிறைவடைந்து மே மாதம் முழு வதும் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு, ஜூன் 1 ஆம் தேதி  6 முதல் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 5 ஆம்  தேதி 1 முதல் 5 ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்தநிலையில், பல்வேறு மாவட்டங் களில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல்  வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்தது.  இதன் காரணமாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பிலும் சமூக வலை தளங்களிலும் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்ததது. இதனைத் தொடர்ந்து,

மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளி கள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் முதல் பள்ளிகள் செயல்பட தொடங்குகின் றன. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள  பள்ளி நிர்வாகங்களின் சார்பில் பள்ளிகளை தூய்மைப்படுத்துதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடு கள் மற்றும் 6 ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் மாண வர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், பள்ளிகள் திறக்கும் அன்றைய தினமே மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சீருடை கள் அணிந்திருந்தாலே பேருந்தில் இலவச மாக பயணிக்கலாம் என்றும் கூறப் பட்டுள்ளது.