தில்லியைச் சேர்ந்த ஜெய்தீப் தேவ் (வயது 52) என்பவர் வலதுகாலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக நுழைவுச் சீட்டுப் பெற்றுள்ளார். அந்த நுழைவுச்சீட்டு டோக்கனில் ஜெய்தீப் தேவ் 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வர கூறப்பட் டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெய்தீப் தேவ் செய்தியாளர்கள் சந்திப் பில் கூறுகையில்,”எனது கால் காயம் குணமாக 3 மாதம் கூட ஆகாது. ஆனால் காயத்தின் தன்மையை ஆராய்வதற்கு ஸ்கேன் எடுக்க 3 ஆண்டு காலம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. தில்லி மற்றும் அதன் சுற்றளவில் உள்ள பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு ரூ.25,000 வரை கேட்கின்றனர். ரூ.5,000 கூட செலவழிக்க முடியாத நிலையில் நான் உள்ளேன். என்ன செய்வதென்று தெரியாததால், ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டு விட்டேன்” என அழும் தொனியில் அவர் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் ரூ. 2,000 முதல் ரூ. 3,000-க்குள் குறைந்த கட்டணத்தில் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் கூறுகை யில், “ஸ்கேன் எடுக்க அதிகளவிலான நோயாளிகள் வருவதால் நேரம் நீட்டிக் கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் உடனடி ஸ்கேன் தேவைப்படுவோருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படு கிறது. நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப பிற உள்நோயாளிகள் மற்றும் புறநோயா ளிகளுக்கு காத்திருப்பு காலம் வழங்கப் படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் அலட்சியம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தில்லியில் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் மக் கள் சிகிச்சைக்காக வருகின்றனர். கிட்டத் தட்ட நாளொன்றுக்கு 15,000 புறநோயாளி கள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் 10% பேருக்கு மட்டுமே எம்ஆர்ஐ, எக்ஸ் ரே, ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதனால், புறநோயாளிகளுக்கான ஸ்கேன் காத்திருப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகள் வரை உள்ளதாக மருத்துவ மனை பணியாளர்கள் தெரிவித்துள்ள னர். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதி வரு வதால் தில்லி - ஹரியானா மாநில எல்லை யில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளை ஒன்றை கட்ட கடந்த சில ஆண்டு களாகவே கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் மோடி அரசு அலட்சியமாக இருப்பதன் காரணமாகவே சாதாரண ஸ்கேன் எடுக்கக் கூட 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.