states

img

கே.கே.சைலஜாவை சிறப்பு கைதட்டலுடன் பாராட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ டி.ஜே.வினோத்....

கொச்சி:
கேரளத்தில் சுகாதாரத் துறையை மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன் மேம்படுத்திய அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு எர்ணாகுளம் காங்கிரஸ் எம்எல்ஏ டி.ஜே. வினோத் ‘சிறப்பு’ கைதட்டல் வழங்கி பாராட்டினார். எர்ணாகுளம் பொது மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிகளின் தொடக்க விழாவில் டி.ஜே.வினோத் எம்எல்ஏ உரையாற்றினார். பொது மருத்துவமனையில் செய்யப்படும் வளர்ச்சிப் பணிகளுக்காக அமைச்சர் ஒரு ‘சிறப்பு’ கைதட்டலுக்கு தகுதியானவர் என்றார். எம்எல்ஏ-வின் வார்த்தைகளை உறுதி செய்வதுபோல் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைதட்டல் எழுந்தது. ‘பொது மருத்துவமனையின் மேம்பாட்டுப் பணிகள் இதற்கு முன்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். கோவிட் பரவுவதால் மருத்துவமனையின் பயன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவது தாமதமானது. சுகாதாரத் துறையில் அரசாங்கம் ஒரு நல்ல வேலையைச் செய்து வருகிறது”என்றும் டி.ஜே. வினோத்  கூறினார்.

;