states

img

கேரளத்தில் ரூ.1,500 கோடி முதலீடு செய்கிறது டிசிஎஸ்.... 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.....

திருவனந்தபுரம்:
தகவல் தொழில்நுட்பத் துறையில் அண்மைக்கால தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட இன்டர்நெட் ஆப் திங்ஸ், பிளாக்செயின், ரோபாட்டிக்ஸ், டேட்டா அனலிட்டிக்ஸ், மெஷின் லேணிங், செயற்கை நுண்ணறிவு போன்ற திட்டங்களை  கேரள அரசு நிறுவனமான திருவனந்தபுரம் டெக்னோசிட்டி அறிமுகப்படுத்துகிறது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி ஆகிய துறைகளில் சமீபத்திய தொழில்நுட்பத்தை வழங்குவதே இதன் நோக்கம். இது 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், மூன்று முதல் ஐந்து மடங்கு மக்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கும்.

பல்லிபுரம் டெக்னோசிட்டியில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) டெக்னோபார்க் மற்றும் டி.சி.எஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இது 1,200 கோடி முதல் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தலைமுறை முயற்சியை அமைக்கும். கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் கேரளத்தில் டிசிஎஸ் மேற்கொள்ளும் ஒரு பெரிய தொழில்துறை முதலீடு ஆகும். இத்திட்டம் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கவும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
தொழில்நுட்ப நிறுவன தொடக்கங்களுக்கு (ஸ்டார்ட் அப்) ஒரு இன்குபேட்டர் மையத்தை அமைக்கவும் டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. டாடா எல்எக்ஸின் வன்பொருள் துறையும் நிறுவப்படும். இதற்காக ஏழு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். டிசிஎஸ்ஸின் பரிந்துரைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

டெக்னோசிட்டியில் ஒரு அதிநவீன பயிற்சி மையத்தை அமைக்க டிசிஎஸ் முன்பு 97 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது. இருப்பினும், பயிற்சி முறைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டதால் இது நடக்கவில்லை. இந்த சூழலில்தான் புதிய திட்டத்தை செயல்படுத்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறையில், டிசிஎஸ் பல்வேறு திட்டங்களின் கீழ் கேரளத்தில் 15,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

;