திருவனந்தபுரம், ஜன.12- திருவனந்தபுரம் மண்டல புற்று நோய் மையம் (ஆர்சிசி) மற்றும் மலபார் புற்றுநோய் மையத்தில் (எம்சிசி) ரூ.60 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை ஏற்படுத்த கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது, புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு பெரிய முன்னேற்றம். ஒரு இடத்தில் ரோபோ இயந்திரம் நிறுவ சுமார் ரூ.30 கோடி செலவாகும். மாநி லத்தில் முதன்முறையாக அரசுத் துறை யில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை கொண்டு வரப்படுகிறது. ரோபோ அறுவை சிகிச்சையின் சாத்தியத்தை உணர்ந்து ஆர்சிசி ஏற்கனவே திட்ட ஆவணத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்திருந்தது. மருத்துவ ரின் கைகளாகச் செயல்படும் ரோபோ, உடலின் எந்த சிக்கலான பகுதியிலும் ஊடுருவிச் செல்லும் என்பது சிறப்பு. இது மனித கைகளால் சென்றடைய முடியாத கட்டிகள் மற்றும் உடலின் பிற பாகங்களை அகற்றும். சிக்க லான அறுவை சிகிச்சைகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்றும் அரசின் இந்த முடிவு சுகாதாரத்துறை யில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆர்சிசி மருத்துவ கண்காணிப் பாளர் மது முரளி தெரிவித்தார். ஆர்சிசி யில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை பிரிவு நிறுவப்படும். ஆறு மாதங்களுக்குள் பணிகள் முடி வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோபோடிக் இயந்திர நிறுவனமே அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சியும் அளிக்கும். எந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும் என்பது குறித்த தகவல் டெண்டர் மூலம் தெரியவரும். இரு இடங்களிலும் ரூ.18.87 கோடி செலவில் டிஜிட்டல் பேத்தாலஜி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைக்க வும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.