states

img

நூறுநாள் திட்டத்தில் 12,067 வீடுகள் வழங்கல் ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் வீடுகள்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு திருவனந்தபுரம், செப்.18- லைஃப் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 12,067 வீடுகள் 100 நாள் திட்டத் தின் ஒரு பகுதியாக ஒப்படைக்கப்பட்டன. வீடு கள் கட்டி முடிக்கப்பட்டதை முதலமைச்சர் பினராயி விஜயன் ஆன்லைனில் அறிவித் தார். வீடற்றோர் இல்லாத கேரளா என்பது இடது ஜனநாயக முன்னணியால் மக்க ளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்று முதல் வர் கூறினார். அந்த பெரிய இலக்கை நோக்கி அரசு உறுதியான அடிச்சுவடுகளுடன் முன் னேறிச் செல்கிறது. அடுத்த ஐந்து வருடங்க ளுக்குள் ஐந்து லட்சம் வீடுகளை நிர்மாணிப்ப தற்கு அரசாங்கம் முன்னோக்கி செல்கிறது. “அந்த இலக்கை அடைய நாம் ஒன்றாக நிற்க முடியும்,” என்று அவர் கூறினார். 2016-2021 ஆம் ஆண்டில், 2,62,131 வீடுகள் லைஃப் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்க ளாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலமற்ற வர்களின் மறுவாழ்வுக்காக 2,207 வீடுகளைக் கொண்ட 36 வீட்டு வளாகங்களின் கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 17 வீட்டு வளாகங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2026 வரை யிலான ஐந்தாண்டு காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வீடுகளை கட்டி முடிக்க வும், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் தனி வீடுகளை கட்டவும் அரசு இலக்கு நிர்ண யித்துள்ளது என்றால் முதல்வர்.

;